ஐசிசி தலைவராக மீண்டும் கிரேக் பார்க்லே தேர்வு.. ஜெய்ஷாவுக்கும் உச்சபட்ச பதவி.. முழு விவரம்!
துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக மீண்டும் கிரேக் பார்க்லே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அனைத்து கிரிக்கெட் கவுன்சிலுக்கும் தலைமையாக விளங்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் பதவிக்கான தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதன் தலைவராக இருந்த நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்க்லே தொடர்ந்து அப்பதவியில் நீடிக்க விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கு எதிராக இன்னும் சிலர் போட்டியிடுவார்கள் எனக் கூறப்பட்டது.

ஐசிசி தேர்தல்
பிசிசிஐ-ல் சவுரவ் கங்குலி-ன் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததையடுத்து அவர் அடுத்த ஐசிசி தலைவராக போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பிசிசிஐ குழுவில் இருந்து ஆதரவுக்கொடுத்ததாக கூறப்பட்டது. ஆனால் கடைசியில் அனைத்துமே பொய்யானது. இதனையடுத்து ஜிம்பாப்வேயின் தாவெங்வா முகுஹ்லானி போட்டியிடுவதாக தகவல் வெளியானது. பின்னர் அவரும் பின் வாங்கினார்.

2வது முறையாக பதவி
இந்நிலையில் எந்தவித போட்டியும் இன்றி இரண்டாவது முறையாக மீண்டும் கிரேக் பார்க்லே ஐசிசி தலைவராக பதவி வகிக்கவுள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் அந்த பதவியில் நீடிப்பார். இதனையடுத்து கிரேக் பார்க்லேவுக்கு அனைத்து நாடுகளிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

யார் அந்த பார்க்லே
நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்க்லே வழக்கறிஞராக இருந்தவர். நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பணியாற்றிய அவர், அதன்பின்னர் ஐசிசி செயல்பாடுகளில் ஈடுபட்டார். 2020ம் ஆண்டு ஒருமனதாக அவர் அதன் தலைவர் பதவிக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜெய் ஷாவுக்கும் பதவி
இதே போல ஜெய் ஷாவும் வெற்றி பெற்றுள்ளார். அதாவது ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரங்கள் துறையின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசி-ல் இந்த துறை முடிவெடுத்த பின்னரே தலைமைக்கு செல்லும் சக்தி இருக்கிறது. பிசிசிஐ-லும் ஜெய்ஷா இதே போன்ற பதவியில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications