For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட் வாழ்க்கையே அந்த கோச்சால் நாசமானதா? உண்மை பேசிய முன்னாள் இந்திய வீரர்

Recommended Video

கிரெக் சாப்பல் பற்றி உண்மை பேசிய இர்பான் பதான்- வீடியோ

மும்பை:தமது கிரிக்கெட் வாழ்க்கை வீணாக போனதற்கு யார் காரணம் என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் 19 வயதான பதான் டெஸ்ட் அரங்கில் அவர் தனது முதல் இன்னிங்சில் ஆடினார். அப்போது இர்பான் பதான் சிறந்த வீரராக பரிணமிப்பார் என்று கருதப்பட்டார்.

2006ம் ஆண்டு கராச்சி டெஸ்ட் போட்டியில் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக்கை கைப்பற்றி திறமையை வெளிப்படுத்தினார். ஆண்டின் சிறந்த வளர்ந்துவரும் வீரராக 2004ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் அவருக்கு விருது வழங்கப்பட்டது.

கோச் சாப்பல்

கோச் சாப்பல்

நாட்கள் செல்ல,செல்ல பேட்டிங்கிலும் கவனம் செலுத்த துவங்கினார். பாராட்டுகளும் வந்தன. பேட்டிங் மூலம் நம்பிக்கை அளித்த அவரை, 2005ம் ஆண்டு பயிற்சியாளராக பொறுப்பேற்ற கிரெக் சாப்பல் ஊக்கப்படுத்தினார்.

அதிக முன்னுரிமை

அதிக முன்னுரிமை

ஐசிசி ஆல்ரவுண்டர்க்கான சர்வதேச தரவரிசையில் தரவரிசையில் இரண்டாம் இடம் பெற்றார். புதிய கபில்தேவ் என்ற அளவுக்கு ரசிகர்களால் புகழப்பட்டார். இருப்பினும், பேட்டிங்கிற்கு மட்டுமே அதிக அளவு முன்னுரிமை அளித்ததால், பந்துவீச்சில் காணாமல் போனார்.

அணியில் இருந்து நீக்கம்

அணியில் இருந்து நீக்கம்

ஒரு கட்டத்தில் 2006ம் ஆண்டின் இறுதியில் இந்திய அணியிலிருந்து வெளியேறினார். அதன்பிறகு, அணியில் இடம்பெற்றாலும், நிலைக்க வில்லை. அவரது வீழ்ச்சிக்கு கிரெக் சாப்ல் தான் காரணம் என்று பலரும் கூறி வந்தனர்.

இன்ஸ்டாகிராம் பதிவு

இன்ஸ்டாகிராம் பதிவு

அந்த குற்றச்சாட்டுகளை இர்பான் பதான் மறுத்து வந்தார். தமது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் அவர் அதை மீண்டும் பதிவு செய்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கேள்வி, பதில் அமர்வு நடத்தினார்.

கிரிக்கெட் வாழ்க்கை

கிரிக்கெட் வாழ்க்கை

வாசகர்களின் பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர், சாப்பல் உங்கள் வாழ்க்கையை பாழாக்கிவிட்டார்... அவரை நீங்கள் மன்னித்தீர்களா என்று கேட்டிருந்தார்.

கற்பனை

கற்பனை

அதற்கு பதான் பதிலளித்திருந்தார். ரசிகரின் குற்றச்சசாட்டை மறுத்த அவர்... உங்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன் என்று பதிலளித்தார்.

Story first published: Tuesday, March 12, 2019, 13:00 [IST]
Other articles published on Mar 12, 2019
English summary
Greg Chappell Ruin Irfan Pathan’s Career.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+