GT vs PBKS: சேஸிங் கிங் பஞ்சாப்புக்கு எதிராக சுப்மன் கில் எடுத்த முடிவு.. பிளேயிங் 11 என்ன?
அகமதாபாத்: 2026 ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளுக்கும் இந்த வெற்றி மிகவும் முக்கியம் என்பதால், மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
கடந்த சில போட்டிகளாகத் தங்கள் அணி இலக்கை வெற்றிகரமாகத் துரத்தி வருவதால், அதே உத்வேகத்தைத் தொடர விரும்புவதாக அவர் தெரிவித்தார். மேலும், பனிப்பொழிவு பெரிய அளவில் இருக்காது என்றாலும், ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளம் ஒத்துழைக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கமளித்தார்.

மறுபுறம் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், "ஆடுகளம் பார்ப்பதற்குப் பசுமையாகவும், பேட்டிங்கிற்குச் சாதகமாகவும் தெரிவதாகக் குறிப்பிட்டார். முதலில் பேட்டிங் செய்து ஒரு பெரிய ஸ்கோரை எட்டத் திட்டமிட்டுள்ளதாக" அவர் கூறினார். இந்தப் போட்டியில் குஜராத் அணியில் சந்து என்ற இளம் வீரர் அறிமுக வீரராகக் களம் இறங்கினார். பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை சேவியர் மற்றும் வைஷாக் ஆகிய இரு வீரர்கள் பந்துவீச்சுப் பிரிவில் அணியில் சேர்க்கப்பட்டனர்.
அகமதாபாத் மைதானத்தின் 5-வது ஆடுகளத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. கறுப்பு மண் கொண்ட இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு 2 டிகிரி வரை பந்து திரும்ப வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ரஷீத் கான் மற்றும் சாஹல் ஆகிய இரு ஜாம்பவான் லெக் ஸ்பின்னர்களுக்கு இடையிலான மோதல் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. மைதானத்தின் எல்லைகள் ஒருபுறம் 64 மீட்டராகவும், நேராக 74 மீட்டராகவும் இருந்ததால் பேட்ஸ்மேன்கள் சிக்ஸர்களை விளாச வாய்ப்பு அதிகம் இருந்தது.
கடந்த சீசன் முதல் இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே அதிக முறை வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் கிங்ஸ் (Playing XI):
பிரப்சிம்ரன் சிங்(விக்கெட் கீப்பர்), பிரியன்ஷ் ஆர்யா, கூப்பர் கானொலி, ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், சூர்யான்ஷ் ஷெட்கே, நேஹல் வதேரா, மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.
பஞ்சாப் கிங்ஸ் இம்பாக்ட் சப் :
ஹர்பிரீத் பிரார், விஷ்ணு வினோத், விஜயகுமார் வைஷாக், முஷீர் கான், மிட்செல் ஓவன்.
குஜராத் டைட்டன்ஸ் (Playing XI):
சுப்மன் கில்(கேப்டன்), சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், நிஷாந்த் சிந்து, ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான், அர்ஷத் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், மானவ் சுதர்.
குஜராத் டைட்டன்ஸ் இம்பாக்ட் சப் :
ராகுல் தெவாட்டியா, கிளென் பிலிப்ஸ், அனுஜ் ராவத், குல்வந்த் கெஜ்ரோலியா, குமார் குஷாக்ரா.


Click it and Unblock the Notifications
