Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியை வீழ்த்தி மெகா சாதனை செய்த குஜராத் டைட்டன்ஸ் பவுலர்.. பும்ரா ரெக்கார்டு முறியடிப்பு!

அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் எத்தனையோ அதிரடி பேட்ஸ்மேன்கள் மற்றும் அபாரமான பந்துவீச்சாளர்கள் வந்தாலும், ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியை எளிதில் வீழ்த்துவது என்பது எப்பேர்ப்பட்ட பந்துவீச்சாளர்களுக்கும் சற்றே சவாலான காரியம் தான். ஆனால், ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஒரு வெளிநாட்டு பந்துவீச்சாளர் மட்டும் கோலிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி, இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையையே சமன் செய்துள்ளார். அவர் யார், அப்படி என்ன புதிய சாதனை படைத்துள்ளார் என்பதை இங்கே விரிவாக பார்ப்போம்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய லீக் போட்டி நடைபெற்றது. இதில் குஜராத் அணிக்காக விளையாடும் தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ககிசோ ரபாடா, ஆர்சிபி அணிக்கு எதிராக அபாரமாக பந்துவீசினார். போட்டியின் 4வது ஓவரில் ரபாடா வீசிய பந்தில், ரஷித் கானிடம் கேட்ச் கொடுத்து கோலி ஆட்டமிழந்தார். ஆட்டமிழக்கும் முன் கோலி 13 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சருடன் 28 ரன்கள் எடுத்திருந்தார். இந்த ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ரபாடா புதிய வரலாற்று சாதனை ஒன்றை தன் வசப்படுத்தியுள்ளார்.

GT vs RCB IPL 2026 Kagiso Rabada Makes History by Dismissing Virat Kohli for the 5th Time

டி20 கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலியை 5 முறை ஆட்டமிழக்கச் செய்த முதல் வெளிநாட்டு பந்துவீச்சாளர் என்ற மாபெரும் பெருமையை ரபாடா தற்போது பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக இந்திய பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் மட்டுமே கோலியை தலா 5 முறை ஆட்டமிழக்க செய்துள்ளனர். தற்போது அவர்களின் சாதனையை ரபாடா சமன் செய்து அசத்தியுள்ளார். அவர் இதுவரை 18 டி20 போட்டிகளில் கோலிக்கு எதிராக பந்துவீசி இந்த அபாரமான மைல்கல்லை எட்டியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் கோலியை அதிக முறை அதாவது 7 முறை வீழ்த்திய பந்துவீச்சாளராக சந்தீப் சர்மா தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அவருக்கு அடுத்தபடியாக ஆஷிஷ் நெஹ்ரா 6 முறை ஆட்டமிழக்க செய்துள்ளார். வெளிநாட்டு பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை, ரபாடாவிற்கு அடுத்தபடியாக மிட்செல் மெக்லெனகன், ஜாக் காலிஸ் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் கோலியை தலா 4 முறை வீழ்த்தியுள்ளனர்.

IPL 2026: RCB கேப்டனுக்காக கொந்தளித்த கோலி.. ஹோல்டர் கேட்ச் பற்றி கிரிக்கெட் விதிகள் சொல்வது என்ன?

IPL 2026: RCB கேப்டனுக்காக கொந்தளித்த கோலி.. ஹோல்டர் கேட்ச் பற்றி கிரிக்கெட் விதிகள் சொல்வது என்ன?

மேலும், நேற்றைய போட்டியில் ஆட்டமிழக்கும் முன், இந்திய மண்ணில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் 8000 ரன்கள் குவித்து புதிய மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையையும் கோலி படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 போட்டிகளில் கோலியை அதிக முறை வீழ்த்திய வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் பட்டியல் விபரம்: (பந்துவீச்சாளர் - நாடு - போட்டிகள் - விக்கெட்டுகள்)

  1. ககிசோ ரபாடா - தென்னாப்பிரிக்கா - 18 - 5
  2. மிட்செல் மெக்லெனகன் - நியூசிலாந்து - 9 - 4
  3. ஜாக் காலிஸ் - தென்னாப்பிரிக்கா - 10 - 4
  4. சுனில் நரைன் - வெஸ்ட் இண்டீஸ் - 29 - 4
  5. ஷெல்டன் காட்ட்ரெல் - வெஸ்ட் இண்டீஸ் - 9 - 3
  6. ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப் - ஆஸ்திரேலியா - 9 - 3
  7. இஷ் சோதி - நியூசிலாந்து - 10 - 3
  8. மோர்னே மோர்கல் - தென்னாப்பிரிக்கா - 12 - 3
  9. ஜேசன் ஹோல்டர் - வெஸ்ட் இண்டீஸ் - 13 - 3
  10. ஆடம் ஜம்பா - ஆஸ்திரேலியா - 17 - 3
  11. சாம் கர்ரன் - இங்கிலாந்து - 17 - 3
  12. கிறிஸ் ஜோர்டான் - இங்கிலாந்து - 19 - 3
  13. ரஷித் கான் - ஆப்கானிஸ்தான் - 20 - 3
  14. ஆண்ட்ரே ரஸல் - வெஸ்ட் இண்டீஸ் - 23 - 3
  15. கீரன் பொல்லார்ட் - வெஸ்ட் இண்டீஸ் - 39 - 3
Story first published: Friday, May 1, 2026, 8:41 [IST]
Other articles published on May 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+