For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

GT vs RR: அகமதாபாத் எங்க கோட்டை தம்பி.. ராஜஸ்தானை சுளுக்கெடுத்த குஜராத்.. புள்ளிப்பட்டியலில் உச்சம்!

அகமதாபாத்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக குஜராத் அணி புள்ளிப் பட்டியலில் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் குஜராத் அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு பிரகாசமாகி இருக்கிறது.

ஐபிஎல் தொடரின் 23வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 53 பந்துகளில் 82 ரன்களை குவித்தார்.

GT vs RR Gujarat Titans won by 58 runs against Rajasthan Royals at Ahmedabad in IPL 2025

இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் - சஞ்சு சாம்சன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ஜெய்ஸ்வால் 6 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த நிதீஷ் ராணா 1 ரன்னில் வெளியேறினார். பின்னர் ரியான் பராக் - சஞ்சு சாம்சன் இணைந்து அதிரடியாக ரன்களை குவித்தனர். 6 ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 57 ரன்களாக உயர்ந்தது.

இந்த நிலையில் 7வது ஓவரில் ரியான் பராக் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த துருவ் ஜுரெல் 5 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் ராஜஸ்தான் அணி 68 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் ஹெட்மயர் - சாம்சன் கூட்டணி இணைந்து ராஜஸ்தான் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தியது.

சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த சாம்சன் 41 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் இம்பேக்ட் பிளேயராக வந்த சுபம் துபே 1 ரன்னில் ரஷீத் கான் பந்தில் வெளியேறினார். இதனால் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி 5 ஓவர்களில் 79 ரன்கள் தேவையாக இருந்தது. இந்த சூழலில் சிறப்பாக ஆடிய ஹெட்மயர் 29 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

இதன்பின் ஆர்ச்சர் 4 ரன்களில் வெளியேற, அதே ஓவரின் கடைசி பந்தில் ஹெட்மயர் 52 ரன்ககளில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் ராஜஸ்தான் அணி 145 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்ததன் காரணமாக குஜராத் அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியது.

இறுதியாக ராஜஸ்தான் அணி 159 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றதன் மூலமாக புள்ளிப் பட்டியலில் உச்சத்திற்கு சென்றுள்ளது. 5 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

Story first published: Wednesday, April 9, 2025, 23:28 [IST]
Other articles published on Apr 9, 2025
English summary
GT vs RR: Gujarat Titans won by 58 runs against Rajasthan Royals at Ahmedabad in IPL 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+