“புயலே அடித்தாலும் ஒன்றும் ஆகாது”.. ஈடன் கார்டனின் பிரமிப்பூட்டும் வசதிகள்.. தெரிந்துக்கொள்ளுங்கள்!!
கொல்கத்தா: கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானம், மழை காரணமாக பல முக்கிய போட்டிகளை பாழாக்கிய வரலாறுகள் உள்ளன.
கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்து வந்த ஐபிஎல் தொடரில், இன்று முதல் ப்ளே ஆஃப் சுற்று தொடங்கவுள்ளது.
முதல் குவாலிஃபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

மழைக்கு வாய்ப்பு
ஆனால் இந்த போட்டி நடைபெறுமா என்பதில் தான் ரசிகர்களுக்கு இன்னும் சந்தேகம் தீராமல் உள்ளது. ஏனென்றால் போட்டி நடைபெறும் கொல்கத்தாவில் கடந்த 2 நாட்களாக கடும் மழை பொழிந்துள்ளது. இன்று காலையில் இருந்து கன மழை பெய்து வந்த சூழலில் தற்போது தான் சற்று வெளிச்சம் வந்துள்ளது. எனினும் போட்டி நடைபெறும் வேளையில் மழைக்குறுக்கிடும் அபாயமும் உள்ளது.

விமர்சனங்கள்
இந்தியாவின் புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானம், இதற்கு முன்னர் பல முக்கிய போட்டிகளை மழை காரணமாக வீணடித்த வரலாறு உண்டு. அதற்கு காரணம் மோசமான "ட்ரைனேஜ் சிஸ்டம்" தான் ( நீரை அகற்றும் வசதிகள் ). சிறு மழை பெய்தால் கூட ஒட்டுமொத்த மழைநீரும், வெளியேறாமல் தேங்கி மைதானத்திலேயே நிற்கும் அளவிற்கு இருந்தது. இதனால் மழை நின்ற பிறகு கூட பல போட்டிகள் ரத்தாகியுள்ளது.

புதிய வசதிகள்
இந்நிலையில் இன்று புயல் அடித்தால் கூட ஒன்றும் செய்ய முடியாத அளவிற்கு மைதானத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர். புதிய பாதாள சாக்கடை வசதி செய்துள்ளதால், தொடர்ந்து 4 மணி நேரம் கனமழை பெய்தால் கூட ஒட்டுமொத்த நீரும் வெறும் 20 நிமிடங்களுக்குள் வெளியேறிவிடும். வெள்ளம் வந்தால் மட்டுமே போட்டியை நிறுத்த முடியும் என்ற அளவிற்கு வசதிகளுடன் உள்ளது.

அதிநவீன மிஷின்கள்
ஈடன் கார்டன் மைதானத்தில் 4க்கும் மேற்பட்ட ராட்சத மிஷின்கள், புற்களில் உள்ள நீரை உறிஞ்சி எடுப்பதற்காக உள்ளன. இவை துளி அளவிற்கு கூட நீர் இல்லாமல் உறிஞ்சிவிடும். இதே போல புற்களை ஒரு துளி அளவுக்கூட இல்லாதவாறு வெட்டி எடுக்க நுணுக்கமான மிஷின்கள் உள்ளன. இவை அனைத்திற்கும் மேலாக ஒட்டுமொத்த மைதானத்தையும் மூடி வைக்கும் அளவிற்கு பிட்ச் கவர் உள்ளதால், களத்திற்கு எந்தவித சேதமும் இருக்காது.

கங்குலி செய்த மாற்றம்
இப்படிப்பட்ட பிரமாண்ட வசதிகள் அனைத்தும், சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் கடந்த 2016ம் ஆண்டு செய்யப்பட்டவை. இதன் பின்னரும் லைட்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டன. இதனை மீறி எந்தவித போட்டியும் மழையால் பாதிக்கப்படாது என்பது தெரிகிறது. இதனால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்குமாறும் பிசிசிஐ தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications