Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டாஸ் வென்ற பேட் கம்மின்ஸ்.. முதல் பேட்டிங் செய்யும் குஜராத் அணி.. அகமதாபாத்தை சைலண்ட் செய்வாரா?

அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். ஐதராபாத் அணியின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. குஜராத் அணி தரப்பில் கரீம் ஜன்னத் நீக்கப்பட்டு, அவரது இடத்தில் ஜெரால்ட் கோட்ஸி சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து ஐதராபாத் அணி களமிறங்கி இருக்கிறது. ஏற்கனவே ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சொந்த மண்ணில் அடைந்த தோல்விக்கு ஐதராபாத் அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

GT vs SRH SRH Captain Pat Cummins won the toss and chose to bowl against Gujarat Titans at Ahmedabad

குஜராத் அணியை பொறுத்தவரை இன்னும் ஒரு போட்டியில் வென்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு அருகில் சென்றுவிட முடியும். இந்த நிலையில் அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியுள்ள போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். அகமதாபாத் மைதானத்தில் சேஸிங்கிற்கு பிட்ச் சாதகமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்பின் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசுகையில், நாங்கள் முதலில் பவுலிங் செய்கிறோம். இந்த பிட்சில் என்ன நடக்கும் என்பதை யாரும் அறிய முடியாது. சில நேரங்களில் இரவில் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருக்கும். சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் வென்றுள்ளோம். அதனால் எங்களுக்கு இன்னும் பிளே ஆஃப் செல்ல சான்ஸ் உள்ளது.

கடந்த 2 போட்டிகளாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளோம். ஒரு அணியாக இணைந்து இதுவரை விளையாடவில்லை. பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசுகையில், நாங்களும் முதலிங் பவுலிங் செய்யவே விரும்பினோம். பார்ப்பதற்கு சிறந்த பிட்சாக உள்ளது.

இந்த சீசன் எங்களுக்கு சிறந்த ஒன்றாக அமைந்துள்ளது. இந்த பிட்சில்தான் மும்பை அணிக்கு எதிராக விளையாடினோம். அந்த போட்டியிலும் முதல் பேட்டிங் ஆடினோம். எங்களுக்கு ரன் ரேட் பற்றி கவலை கிடையாது. எங்கள் அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கரீம் ஜன்னத்-க்கு பதிலாக கோட்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

Story first published: Friday, May 2, 2025, 19:15 [IST]
Other articles published on May 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+