Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விஜயகாந்த் சாங்.. ஜிம்மில் பிளே பண்ணச் சொல்லி.. அஷ்வினிடம் அடம் பிடித்த ஜடேஜா

மும்பை: இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பிடித்த தமிழ் பாடல் குறித்து தனது யூடியூபில் பேசியிருக்கிறார் ரவிச்சந்திர அஷ்வின்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இப்போது இங்கிலாந்தில் இருக்கிறது. வரும் ஜூன் 18ம் தேதி நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக தற்போது சவுத்தாம்ப்டன் ஹோட்டலில் குவாரண்டைனில் உள்ளது.

இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. இதற்கான இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில், ஜடேஜாவுக்கு பிடித்த தமிழ் பாடல் குறித்து அஷ்வின் பேசியுள்ளார்.

தனி ரசிகர் கூட்டம்

தனி ரசிகர் கூட்டம்

கொரோனா காலம் தொடங்கியதில் இருந்தே, தனக்கென யூடியூப் சேனல் தொடங்கி, அதில் பல சுவாரஸ்ய நேர்காணல் எடுப்பது, இந்திய அணியுடனான தனது அனுபவத்தை பகிர்வது என்று சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார் அஷ்வின். அதிலும், அவரது நேர்காணலுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

தலைப்புச் செய்தி

தலைப்புச் செய்தி

கவுண்டமணி காமெடி டயலாக்ஸ்களையும், வடிவேலு மேனரிஸத்தை மிக்ஸ் செய்தும் அவர் எடுக்கும் இன்டர்வியூக்கள் பார்ப்பதற்கு ஃபிரெஷ்ஷாக இருக்கும். அவரது நேர்காணலில் கிடைக்கும் பல கண்டென்ட்டுகள், மறுநாள் தமிழ் பத்திரிகைகளில் விளையாட்டுப் பக்கங்களில் தலைப்புச் செய்தியாக வரும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல தகவல்கள் கிடைக்கும்.

எங்கள் வீட்டில் எல்லா நாளும்

எங்கள் வீட்டில் எல்லா நாளும்

அந்த வகையில், அஷ்வின் தனது யூடியூபில் ஜடேஜா குறித்து பேசுகையில், "நான் எப்போதும் ஜிம்முக்கு போகும் போது தமிழ் பாடல்கள் தான் போடுவேன். அப்போது ஜடேஜா என்னிடம், 'நான் ஒரு தமிழ் பாடலை ரொம்ப லைக் பண்றேன்' என்றார். அது என்ன பாடல்-னு கேட்டா, 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' என்று வானத்தைப் போல படத்தில் இருந்து விஜயகாந்த் பாடல் ஓடிக்கிட்டு இருக்கு. அதுக்கப்புறம், அந்த படம் பற்றி எல்லா விஷயத்தையும் என்னிடம் கேட்டு அவர் தெரிஞ்சிக்கிட்டார்' என்று கூறியிருக்கிறார்.

ஜடேஜா ஆல் டைம் ஃபேவரைட்

ஜடேஜா ஆல் டைம் ஃபேவரைட்

அதுமட்டுமல்ல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஜடேஜாவுக்கு ஒவ்வொரு மொழியிலும் பிடித்த பாடல்களை பட்டியலிட்டது. அதிலும், 'எங்கள் வீட்டில் எல்லா நாளும்' பாடலே அவரது ஆல் டைம் ஃபேவரைட் லிஸ்டில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படிப் போடு அருவாள..

Story first published: Saturday, June 5, 2021, 20:04 [IST]
Other articles published on Jun 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+