Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெங்கால் வாரியர்ஸை அடிச்சு துவைத்து காயவைத்து இஸ்திரியும் செய்த குஜராத் பார்சூன் ஜயன்ட்ஸ்!

மும்பை: மேட்ச்பிங்சிங் செய்திருந்தால் கூட, இந்த அளவுக்கு ஒரு வெற்றியைப் பெற்றிருக்க முடியுமா என்று சந்தேகம் ஏற்படும் வகையில், 42-17 என்ற கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை குஜராத் பார்சூன்ஜயன்ட்ஸ் அணி வென்றது.

புரோ கபடி லீக் 5வது சீசன் போட்டியின் பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் நடக்கின்றன. நேற்று இரவு நடந்த குவாலிபையர்-1 போட்டியில் ஏ பிரிவில் முதலிடம் பிடித்துள்ள குஜராத் பார்சூன்ஜயன்ட்ஸ் அணியும், பி பிரிவில் முதலிடம் பெற்ற பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின. 42-17 என்ற புள்ளிக் கணக்கை பார்க்கும்போதே, போட்டி எப்படி நடந்திருக்கும் என்பது புரிந்து விடும்.

Gujarat enters Finals

நேற்று இரவு நடந்த மூன்றாவது எலிமினேட்டர் போட்டியில் முதல் இரண்டு எலிமினேட்டர் போட்டிகளில் வென்ற பட்னா பைரேட்ஸ் அணியும், புனேரி பல்தான் அணிகளும் மோதின. இதில், பட்னா பைரேட்ஸ் அணி 42-32 என்ற கணக்கில் வென்றது.

இதன் மூலம் புனேரி பல்தான் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது. குவாலிபையர்-1ல் தோல்வியடைந்தாலும்,பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது.

நாளை நடக்கும் குவாலிபையர்-2 போட்டியில் பட்னா பைரேட்ஸ் அணியும், பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி, 28ல் நடக்கும் பைனலில் குஜராத் பார்சூன்ஜயன்ட்ஸ் அணியுடன் மோதும்.

Story first published: Wednesday, October 25, 2017, 12:22 [IST]
Other articles published on Oct 25, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+