Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குஜராத் வெள்ளத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீராங்கனை.. உயிருக்கு போராடிய போது காப்பாற்றிய ராணுவம்

வதோதரா : குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் கன மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதில் 28 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

வரலாறு காணாத அளவு மழை பெய்திருக்கிறதால் டேவ்பூமி தவர்கா, ஜாம்நகர், ராஜ்கோட் போர்பந்தர் போன்ற பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனை அடுத்து குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேலிடம் நிலைமையை குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டு அறிந்திருக்கிறார்.

india cricket team radha yadv

இதை அடுத்து குஜராத் முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்திய ராணுவ வீரர்கள் மீட்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் வதோதராவில் தங்கி இருக்கும் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ராதா யாதவ் வெள்ளத்தில் சிக்கியிருக்கிறார்.

உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் ராதா யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டு சென்று இருக்கிறார்கள். இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் ராதா யாதவ் நன்றி தெரிவித்துள்ளார்.
தாங்கள் மிகவும் கடினமான ஒரு சூழலில் சிக்கிக் கொண்டோம்.

india cricket team radha yadv

எங்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் தான் பத்திரமாக மீட்டு வந்தார்கள். அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார். ராதா யாதவ் வரும் அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி தொடங்க உள்ள டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார்.

இந்திய அணிக்காக 80 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுகளை ராதா யாதவ் வீழ்த்தி இருக்கிறார். இதுபோன்று சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 4 போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட்டை ராதா யாதவ் வீழ்த்திருக்கிறார். ராதா யாதவ் வெள்ளத்தில் சிக்கி பத்திரமாக மீட்கப்பட்ட செய்தி அறிந்த ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்வதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

india cricket team radha yadv

இந்த நிலையில் குஜராத்தில் ஏற்கனவே வெள்ளம் வடியாத நிலையில் தற்போது மேலும் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது இதனால் குஜராத் அரசு அதிகாரிகள் உச்சகட்ட எச்சரிக்கையுடன் நிலைமையை கண்காணித்து வருகின்றனர். சமூக வலைத்தளத்திலும் மக்கள் Pray for குஜராத், save குஜராத் போன்ற ஹேஷ்டேக்களை பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஒரு ஆண்டு பெரிய வேண்டிய மழை, ஒரு வாரத்தில் பெய்து இருப்பதால் கடும் சேதம் ஏற்பட்டிருப்பதாக குஜராத் அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

Story first published: Thursday, August 29, 2024, 14:59 [IST]
Other articles published on Aug 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+