Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WPL 2026- ஒரே போட்டியில் 21 சிக்சர்கள்.. குஜராத், உபி அணிகள் மோதிய ஆட்டத்தில் ரன் மழை

மும்பை: WPL லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், யுபி வாரியர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இப்போட்டியில் 21 சிக்ஸர்கள் குவிக்கப்பட்டு, WPL வரலாற்று சாதனை படைக்கப்பட்டது. WPL 2026 போட்டியில் அடிக்கப்பட்ட இந்த 21 சிக்ஸர்கள், ஒரு WPL ஆட்டத்தில் அதிக சிக்ஸர்களுக்கான புதிய சாதனையாக அமைந்தது. இது 2024ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேபிடல்ஸ் அணிகளிடையேயான போட்டியில் அடிக்கப்பட்ட 19 சிக்ஸர்கள் என்ற முந்தைய சாதனையை முறியடித்தது.

முதலில் பேட் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ், தொடக்க வீராங்கனை சோஃபி டிவைன் 38 ரன்களில் வெளியேறினார். பின்னர் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் பொறுப்பேற்று ரன் வேகத்தை உயர்த்தினார். அவர் அனுஷ்கா சர்மாவுடன் 30 பந்துகளில் 44 ரன்கள் எடுக்க, மூன்றாவது விக்கெட்டுக்கு 103 ரன் பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். கார்ட்னர் 41 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உட்பட 65 ரன்கள் விளாசினார்.

இறுதியில், ஜார்ஜியா வேர்ஹாம் 10 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 27 ரன்களும், பாரதி ஃபுல்மாலி 7 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 14 ரன்களும் சேர்க்க, குஜராத் ஜெயண்ட்ஸ் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. யுபி வாரியர்ஸ் பந்துவீச்சாளர்களில் சோஃபி எக்லெஸ்டோன் 32 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

208 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய யுபி வாரியர்ஸ், கிரண் நவகிரேவை துவக்கத்திலேயே ரேணுகா சிங்கிடம் இழந்தது. பின்னர் மேக் லேன்னிங் மற்றும் ஃபீப் லிட்ச்பீல்ட் இணை, 70 ரன்கள் குவித்து இன்னிங்ஸை நிலைப்படுத்தியது.

ஆனால், யுபி வாரியர்ஸ் அணி எதிர்பாராத திடீர் சரிவைச் சந்தித்தது. லேன்னிங், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா ஆகியோர் ஜார்ஜியா வேர்ஹாம் பந்துவீச்சில் 5 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து, 73 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற வலுவான நிலையிலிருந்து 74 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என சரிந்தது.

ஃபீப் லிட்ச்பீல்ட் 40 பந்துகளில் 8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உட்பட 78 ரன்கள் குவித்து, ஸ்வேதா செஹ்ராவத்துடன் 69 ரன்கள் சேர்த்து தனி ஆளாய் போராடினார். 16வது ஓவரில் அவர் ஆட்டமிழந்தது, ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது.ஆஷா சோபனாவின் இறுதிநேர அதிரடி (10 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 27 ரன்கள்) சில உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை. யுபி வாரியர்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது, குஜராத் ஜெயண்ட்ஸ் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

Story first published: Saturday, January 10, 2026, 20:19 [IST]
Other articles published on Jan 10, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+