Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட்டை போல் தேர்தலிலும் "பெட்".... குஜராத்தில் ரூ.1000 கோடிக்கு களைகட்டும் சூதாட்டம்!

காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என ரூ.1000 கோடிக்கு பெட் கட்டியுள்ளனர் சூதாட்ட புரோக்கர்கள்.

பொதுவாக கிரிக்கெட் விளையாட்டுகளின் போது எந்த அணி வெற்றி பெறும் என்பது தொடர்பாக ஏராளமான சூதாட்டங்கள் நடைபெறும். இது சட்டவிரோதமான செயல் என்ற போதிலும் பணத்தாசை யாரை விட்டது என்பதற்கிணங்க பெட்டிங் கொடி கட்டி பறந்து வருகிறது.

எதற்கெடுத்தாலும் பெட் கட்ட ஆரம்பிக்கும் சூதாட்ட புரோக்கர்கள் (புக்கிகள்) தற்போது தேர்தல்களுக்கும் தங்கள் கைவரிசையை காட்ட ஆரம்பித்துவிட்டனர்.

 மாநில சட்டசபை தேர்தல்

மாநில சட்டசபை தேர்தல்

குஜராத் மாநிலத்துக்கு வரும் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 182 தொகுதிகளை கொண்டுள்ள குஜராத் சட்டசபையை யார் கைப்பற்றுவதி என்பதில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகின்றன.

 மோடி அரசு

மோடி அரசு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் பல்வேறு உயிரிழப்புகளும் நேர்ந்தன. கடந்த ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சட்டசபை தேர்தலையொட்டி குஜராத் மாநில வியாபாரிகளை குஷிப்படுத்தும் நோக்கில் ஜிஎஸ்டி வரி சில பொருள்களுக்கு குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 பாஜகவுக்கு எதிராக பிரசாரம்

பாஜகவுக்கு எதிராக பிரசாரம்

காங்கிரஸ் கட்சியினர் பாஜக அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி ஆகியவற்றை முன்வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். பாஜக அரசோ மோடி அந்த மாநிலத்தில் முதல்வராக இருந்த போது செய்யப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து தற்போது மத்தியில் ஆட்சி பொறுப்பேற்று செய்து வரும் திட்டங்கள் குறித்தும் பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் போட்டி கடுமையாக உள்ளது.

 சூதாட்டத்தில் புக்கிகள்

சூதாட்டத்தில் புக்கிகள்

தற்போது பாஜக அரசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படும் நிலையில் அதன் வெற்றி தோல்வியை தீர்மானித்து சூதாட்டங்களும் நிகழ்கின்றன. சுமார் ரூ.1000 கோடி அளவுக்கு பெட்டிங் கட்டபட்டுள்ளதாம். பாஜக வெற்றி பெறுவதாக ரூ. 1 பெட் கட்டினால் புக்கிகள் ரூ.1.25 கொடுக்கின்றனர். காங்கிரஸ் வெற்றி பெறும் என்று ரூ.1 கட்டினால் ரூ. 2 கொடுக்கின்றனர்.

 புக்கிகளும் தொகையை உயர்த்தியுள்ளனர்

புக்கிகளும் தொகையை உயர்த்தியுள்ளனர்

காங்கிரஸ் கட்சியின் பிரசாரம் சூடு பிடித்துள்ளதால் புக்கிகளும் பெட்டிங் தொகையை அதிகரித்துள்ளனர். கடந்த நவம்பரில் காங்கிரஸ் வெற்றிக்கு ரூ.1 கட்டினால் புக்கிகள் ரூ.7 கொடுப்பதாக அறிவித்தனர். பாஜக 118 இடங்களில் வெற்றி பெறும் என்று ஒரு தரப்பினரும், 100 இடங்களில் வெற்றி பெறும் என்று மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

 ஒன் இந்தியாவுக்கு கருத்து

ஒன் இந்தியாவுக்கு கருத்து

இதுகுறித்து புக்கி ஒருவர் ஒன் இந்தியாவுக்கு பேட்டி அளிக்கையில், மோடி அலை எங்கும் வீசுவதால் பாஜக வெற்றி பெறுவது உறுதி. மக்களும் பாஜகவுக்குத்தான் வாக்களிப்பர். அதேவேளையில் காங்கிரஸ் கட்சியும் எழுச்சி பெற்றுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. பட்டேல்கள் விவகாரத்திலும் ஜிஎஸ்டிக்கு எதிராக செய்யும் பிரசாரத்தாலும் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஊரக பகுதிகளில் போட்டி கடுமையாக இருக்கும். ஆனால் கிராமப்புற பகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்றார் அந்த சூதாட்ட புரோக்கர்.

Story first published: Monday, November 27, 2017, 12:42 [IST]
Other articles published on Nov 27, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+