Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்பர் 1 அணி எல்லாம் இல்லை.. குஜராத் டைட்டன்ஸ்-க்கு புள்ளிப் பட்டியலில் அடி.. RCB, PBKSயால் அழுத்தம்

அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை சிறப்பாக ஆடிவந்த நிலையில், கடைசி ஒரு போட்டி மட்டும் மீதம் இருக்கும் நிலையில் சறுக்கலைச் சந்தித்துள்ளது. அந்த அணி நேற்று நடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிராகத் தோல்வியடைந்தது. அது குஜராத் டைட்டன்ஸின் 13வது போட்டியாகும்.

தற்போது 18 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்தில் தான் இருக்கிறது. ஆனால், அடுத்த இரண்டு இடங்களில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தலா 12 போட்டிகளில் விளையாடி, இரண்டும் 17 புள்ளிகளுடன் உள்ளன. அந்த அணிகள் தங்களின் கடைசி இரண்டு போட்டிகளிலும் வென்றால், குஜராத் டைட்டன்ஸை விட அதிக புள்ளிகளைப் பெற்று முதல் இரண்டு இடங்களில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளன.

Gujarat Titans IPL 2025 IPL IPL points table Chennai Super Kings

குஜராத் டைட்டன்ஸ் தனது கடைசி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. அந்தப் போட்டியில் தோல்வியடைந்தால், 18 புள்ளிகளுடன் மட்டுமே இருக்கும். அப்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தங்களின் அடுத்த இரண்டு போட்டிகளில் ஒன்று அல்லது இரண்டு வெற்றிகளைப் பெறுவதன் மூலம் 19 அல்லது 21 புள்ளிகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது 13 போட்டிகளில் 16 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி தனது கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் 18 புள்ளிகளைப் பெறும். அதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி சரிசமமாக இருக்கும் நிலை ஏற்படும்.

முதல் இரண்டு இடங்களை இழந்தால், குஜராத் டைட்டன்ஸ் மூன்றாவது அல்லது நான்காவது இடத்துக்குச் செல்லும். பிளேஆஃப் சுற்றில் முதல் இரண்டு இடங்களில் இடம்பெறும் அணிகள் முதல் தகுதிச் சுற்றில் (Qualifier 1) விளையாடும். அதில் தோல்வியடையும் அணி அடுத்து எலிமினேட்டர் போட்டியில் விளையாடும்.

எனவே, முதல் இரண்டு இடங்களில் இடம்பெறும் அணிகளுக்கு முதல் தகுதிப் போட்டியில் தோல்வியடைந்தாலும் மறுவாய்ப்பு கிடைக்கும். இதனால், புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இடம்பெறுவது மிகவும் முக்கியமாகும். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசிப் போட்டி மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

Story first published: Friday, May 23, 2025, 9:32 [IST]
Other articles published on May 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+