Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் குஜராத்தை விட்டு விலகும் சுப்மான் கில்? CSK க்கு வராறா? திடீர் டிவிட்டால் ரசிகர்கள் குழப்பம்

அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து நட்சத்திர வீரர் சுப்மான் கில் விலகப் போகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Gujarat titans tweet on shubman gill make fans confusion

அதற்கு காரணம் ஐபிஎல் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி இன்று டிவிட்டரில் ஒரு பதிவு செய்திருந்தது.

அதில் சுப்மான் கில்லுடன் பயணித்தது மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் உங்களுடைய நினைவுகளுக்கு மிக்க நன்றி.

உங்களுடைய அடுத்த பயணம் சிறப்பாக அமையட்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இதற்கு சுப்மான் கில்லும் நன்றி தெரிவப்பது போல் ஸ்மைலி பயன்படுத்தினார். இதனால் சுப்மான் கில், குஜராத் அணியை விட்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. ஒருவேளை ஐபிஎல் வீரர்களை பரிமாற்றம் செய்யும் டிராஃப்ட் முறையில் கில் சிஎஸ்கே அணிக்கு வரப்போகிறாரா என்று சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

ஏனென்றால் குஜராத்தை சேர்ந்த ரவீந்திர ஜடேஜாவுக்கும் சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இதனால் குஜராத்துக்கு ஜடேஜா திரும்ப திட்டமிட்டுள்ளதால் அவருக்கு பதிலாக சுப்மான் கில்லை சிஎஸ்கே மாற்றிக் கொள்ளும் என்று கருதப்பட்டது. இதனால் முதலில் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காரணம் ஏற்கனவே ருத்துராஜ் கெய்க்வாட் அணியில் இருப்பதால் சுப்மான் கில் சிஎஸ்கேவில் இணைந்தால் சிறப்பான தொடக்க வீரர்கள் அமைந்து விடுவார்கள் என கருதினர். ஆனால் இறுதியில் இது ஒரு விளம்பர யுக்தியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சுப்மான் கில் போன்ற ஒரு வீரரை அணியை விட்டு அனுப்ப குஜராத் டைட்டன்ஸ் முடிவெடுத்து இருக்காது என்று பல்வேறு கிரிக்கெட் விமர்சனங்கள் கூறியுள்ளனர்.

Story first published: Saturday, September 17, 2022, 19:48 [IST]
Other articles published on Sep 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+