
முக்கிய போட்டி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள் மற்றும் ஒரே ஒரு தோல்வியுடன் உள்ளது. இதே போல ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணியும் 4ல் 3 வெற்றிகளை பெற்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வியடைந்தது.

புள்ளிப்பட்டியல் மாற்றம்
வெற்றி, தோல்விகள் சரிசமமாக இருந்தாலும், ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் முதலிடத்திலும், குஜராத் அணி 5வது இடத்திலும் உள்ளது. இன்றைய போட்டியில் மட்டும் குஜராத் அணி வெற்றி பெற்றுவிட்டால் 5வது இடத்தில் இருந்து நேரடியாக முதலிடத்திற்கு முன்னேறும். டாப் வரிசை மொத்தமும் மாற்றம் பெறும்.

மாற்றங்கள் என்ன
குஜராத் அணியை பொறுத்தவரையில் ஒரே ஒரு மாற்றம் தான் தேவையாக உள்ளது. ஓப்பனிங் வீரர் மேத்யூவ் இதுவரை 30, 1, 6, 19 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். எனவே இன்றைய போட்டியில் அவருக்கு ஹர்திக் மீண்டும் வாய்ப்பு தருவாரா என்ற குழப்பம் உள்ளது. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில் கடந்த 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனவே அந்த ப்ளேயிங் 11-ஐ அப்படியே வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.

ப்ளேயிங் 11 விவரம்
குஜராத் : மேத்யூவ் வேட், சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர், ராகுல் தேவட்டியா, அபினவ் மனோகர், ரஷித் கான், லாக்கி ஃபெர்க்யூசன், முகமது ஷமி, தர்ஷன் நல்கண்டே
ராஜஸ்தான் : ஜாஸ் பட்லர், ராசி வாண்டர் டுசன், தேவ்தத் பட்டிக்கல், சஞ்சு சாம்சன், சிம்ரான் ஹெட்மெயர், ரியான் பராக், குல்தீப் சென், அஸ்வின், ட்ரெண்ட் போல்ட், பிரஷித் கிருஷ்ணா, யுவேந்திர சாஹல்


Click it and Unblock the Notifications











