For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு.. இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் பரபரப்பு.. என்ன நடந்தது??

முல்தான்: இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் நடந்து வரும் சூழலில் அங்கு திடீரென துப்பாக்கிச்சூடு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகிறது. சுமார் 17 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு டெஸ்ட் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது.

பாகிஸ்தானில் பாதுகாப்பு குறைபாடு என பல நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாத சூழலில் தான் இங்கிலாந்து இந்த முயற்சியை எடுத்துள்ளது. இதனால் ஒரு அதிபருக்கு வழங்கக்கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அவர்களுக்கு தரப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு

பலத்த பாதுகாப்பு

இந்நிலையில் இந்த பாதுகாப்புகளையும் மீறி தற்போது ஒரு அச்சுறுத்தல் உண்டாகியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதனால் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது டெஸ்ட் இன்று ( 09.12.2022 ) தொடங்கியது. இந்த போட்டி முல்தான் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.

துப்பாக்கிச்சூடு சம்பவம்

துப்பாக்கிச்சூடு சம்பவம்

இப்போட்டிக்காக இங்கிலாந்து வீரர்கள் இன்று காலை ஹோட்டலில் இருந்து புறப்பட்டனர். அப்போது திடீரென ஹோட்டலுக்கு அருகில் எங்கோ துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது. எனினும் வீரர்கள் அனைவரும் பத்திரமாக மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஹோட்டலுக்கு சுமார் 1 கிமீ சுற்றளவில் தான் துப்பாக்கிச்சூடு நடந்திருக்கும் என கூறியுள்ளனர்.

முதல் பிரச்சினை

முதல் பிரச்சினை

இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சென்றடைந்தவுடனேயே ஒரு பிரச்சினை இருந்தது. அந்த அணியில் 11 வீரர்களுக்கும் மேல் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைப் பெற்றனர். இதனால் முதல் டெஸ்ட் போட்டி நடக்குமா? என்பதிலேயே சந்தேகம் இருந்து வந்தது. பின்னர் சாதாரண வைரஸ் தாக்குதல் தான் என கூறப்பட்டு போட்டி நடத்தப்பட்டது.

பாகிஸ்தான் அணி தோல்வி

பாகிஸ்தான் அணி தோல்வி

அந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணிலேயே 74 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பெற்றது. 2வது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஆனால் நினைத்தது போல சிறப்பாக செயல்பட முடியவில்லை. 180 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

Story first published: Friday, December 9, 2022, 13:59 [IST]
Other articles published on Dec 9, 2022
English summary
Reports says that Gunshots in Multan city while England and pakistan clashing in 2nd Test match
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+