Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கப்தில் போட்ட டபுள் சதத்தை கட்டிய மனைவி கூட கொண்டாடவில்லை... தெரியுமா?

ஆக்லாந்து: உலக கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கால்இறுதியில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் 237 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். ஆனால் இந்த அதிரடியை அவரது காதல் மனைவி கொண்டாடப்போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.

உலக கோப்பை காலிறுதி போட்டியில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கப்தில் 237 ரன்களை குவித்து நாட்-அவுட்டாக நின்றார். இரட்டை சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர், உலக கோப்பையில் தனி நபராக அதிக ரன் குவித்தவர் என்பது போன்ற பெருமைகள் இவருக்கு கிடைத்துள்ளன.

மனைவி நேரில் பார்த்தார்

மனைவி நேரில் பார்த்தார்

கப்திலின் இந்த ஆட்டத்தை அவரது காதல் மனைவி லாரா மெக்கோல்ட்ரிக், மைதானத்தில், நேரில் கண்டுகளித்து உற்சாகப்படுத்தினார். கணவரின் அதிரடி ஆட்டம் குறித்து அவர் கூறியதாவது: எனது பெற்றோருடன் அமர்ந்து கப்திலின் ஆட்டத்தை கண்டு ரசித்தேன். இது எங்கள் எல்லோருக்கும் மறக்க முடியாத ஒரு தருணம்.

கொண்டாட்டம் இல்லை

கொண்டாட்டம் இல்லை

ஆனால் இந்த சாதனையை நாங்கள் பெரிய அளவில் கொண்டாடப்போவதில்லை. இது மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனாலும் உலக கோப்பையை வென்ற பிறகு கொண்டாட்டத்தை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறோம், என்று கூறியுள்ளார்.

பலே மனைவி

பலே மனைவி

கர்ச்சிப் வாங்கினாலே பார்ட்டி வைக்கும் இந்த காலத்தில், இரட்டை சதம் அடித்தபோதும், அமைதியாக இருக்கும் கப்தில் மனைவி வித்தியாசமானவர்தான்.

ரேடியோ ஜாக்கி

ரேடியோ ஜாக்கி

லாரா மெக்கோல்ட்ரிக், தொலைக்காட்சி பிரபலம் மற்றும் ரேடியோ ஜாக்கியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டை விரல்

இரட்டை விரல்

13 வயதில் ஏற்பட்ட விபத்தால், கப்தில் இடது காலில் 3 விரல்கள் இல்லை. அவர் இரட்டை விரல் கப்தில் என்றுதான் சக வீரர்களால் அழைக்கப்படுகிறார் என்பது நினைவு கூறத்தக்கது.

Story first published: Monday, March 23, 2015, 13:04 [IST]
Other articles published on Mar 23, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+