Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பல்லே பல்லே.... "பஜ்ஜி"யுடன் இணைந்து ஆடுவது சந்தோஷம்.. குர்கீரத் சிங் உற்சாகம்

சண்டிகர்: சுழற்பந்து ஜாம்பவான் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து விளையாடுவது மிகவும் பெருமையானது, அதிர்ஷ்டமானது என்று கூறியுள்ளார் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ஆல் ரவுண்டர் குர்கீரத் சிங்.

இந்திய ஏ அணியில் இடம் பெற்றுள்ள குர்கீரத் சிங் மான், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.

ஒரு நாள் மற்றும் டுவென்டி 20 தொடரில் இவர் இந்திய அணியில் இடம் பெற்று ஆடவுள்ளார். இந்த நிலையில் இந்திய அணியில் இடம் பெற்றிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் குர்கீரத் சிங்.

டோணிதான்

டோணிதான்

எனக்கு எப்போதுமே டோணிதான் முன்மாதிரி. அவரது பேட்டிங் ஸ்டைலேயே நான் பின்பற்றுகிறேன். அவரிடமிருந்து நிறைய பாடம் கற்றுக் கொள்கிறேன்.

டோணியுடன் ஆடுவது பெருமை

டோணியுடன் ஆடுவது பெருமை

டோணியுடன் இணைந்து ஆடுவது என்பது கனவு போல. அது நனவாகியுள்ளது. அவருடன் இணைந்து ஆடுவது பெருமை தருகிறது. அவருடன் டிரஸ்ஸிங் ரூமில் இடம் பெறுவதே பெருமையானது.

பஜ்ஜி

பஜ்ஜி

அதேபோல பஞ்சாபைச் சேர்ந்த ஹர்பஜன் சிங் எனது பந்து வீச்சு ரோல் மாடல். அவருடன் இணைந்து பந்து வீசப் போவதை பெருமையாக, அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.

உதவியாக இருப்பவர்

உதவியாக இருப்பவர்

பஞ்சாப் அணியில் அவருடன் இணைந்து ஆடியுள்ளேன். இப்போது இந்திய அணியில் இணைந்து ஆடுவதை பெருமையாக கருதுகிறேன். நிறைய உதவி செய்பவர் அவர். பந்து வீச்சு தொடர்பாக நிறைய டிப்ஸ் கொடுப்பார் என்று கூறியுள்ளார் குர்கீரத் சிங்.

9 வயது முதல்

9 வயது முதல்

குர்கீரத் சிங் சண்டிகரைச் சேர்ந்தவர். 9 வயதிலேயே கிரிக்கெட் ஆட ஆரம்பித்து விட்டார். சுழற்பந்து வீச்சிலும் பேட்டிங்கிலும் சிறப்பாக இருப்பவர் குர்கீரத் சிங்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ஐபிஎல் தொடரில் இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடி வருகிறார். இந்தத் தொடரில் ஆட ஆரம்பித்த பிறகுதான் இவர் பேட்டிங்கில் ஜொலிக்க ஆரம்பித்தார்.

Story first published: Monday, September 21, 2015, 15:18 [IST]
Other articles published on Sep 21, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+