Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பவுண்டரியா அடிக்கிறாய்? டக்கெட்டை வீழ்த்தி முகத்திற்கு நேராக கத்திய அறிமுக வீரர் குர்னூர் பிரார்

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார் அறிமுகம் ஆனார். அவர் இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட்டை வீழ்த்திய பிறகு பழி வாங்கிய மகிழ்ச்சியில் அவரது முகத்திற்கு நேராக ஆக்ரோஷமாக கத்தி வழியனுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் 8வது ஓவரை அறிமுக வீரர் குர்னூர் பிரார் வீசிய போது, பென் டக்கெட் அடுத்தடுத்து ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸர் விளாசி மிரட்டினார். அதே ஓவரின் 5வது பந்தை டக்கெட் தடுத்து ஆட, பந்தை எடுத்த குர்னூர் ஆக்ரோஷமாக விக்கெட்டை நோக்கி வீசினார். அது டக்கெட் மீது படாமல் நூலிழையில் தப்பியது. அதற்கு டக்கெட் சிரித்து பதில் அளித்தார்.

Gurnoor Brar Aggressively Celebrates Ben Duckett s Wicket after he hit him for back to back boundaries

தன் ஓவரில் பவுண்டரிகளை அடித்த டக்கெட்டை பழிவாங்க காத்திருந்த குர்னூர் 13வது ஓவரில் அவரது விக்கெட்டை வீழ்த்தினார். அந்த ஓவரின் 4வது பந்தில் 43 ரன்கள் எடுத்திருந்த டக்கெட், பவுண்டரி எல்லை அருகே நின்றிருந்த ஜஸ்பிரித் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட் வீழ்ந்ததும் டக்கெட்டின் முகத்திற்கு நேராகச் சென்று ஆக்ரோஷமாக கத்தி குர்னூர் தனது வெற்றிக் கொண்டாட்டத்தை செய்தார்.

இந்தப் போட்டியில் ரன் கொடுத்தாலும் முதல் 2 விக்கெட்களை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார் குர்னூர் பிரார். அவர் 9 ஓவர்கள் பந்துவீசி 61 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்தார். ஜேக்கப் பெத்தேல் மற்றும் டக்கெட் என இருவரின் விக்கெட்டையும் ஒரே ஓவரில் வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 47.5 ஓவர்கள் முடிவில் 258 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 76 ரன்களும், லியாம் டாவ்சன் 68 ரன்களும் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் அபாரமாகப் பந்துவீசிய அக்சர் படேல் 4 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா மற்றும் அறிமுக வீரர் குர்னூர் பிரார் தலா 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா, சிவம் துபே ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Story first published: Tuesday, July 14, 2026, 20:21 [IST]
Other articles published on Jul 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+