
தொடரிலிருந்து வெளியேற்றம்
ஐபிஎல் 2020 போட்டிகளில் துவக்கத்தில் 7 போட்டிகளில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி கொண்டது. ஆனால் அதையடுத்து சுதாரித்த அந்த அணி தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்று ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தது. ஆனால் சிஎஸ்கேவுடனான இறுதி லீக் போட்டியில் தோற்று தொடரிலிருந்து வெளியேறியது.

வெற்றி பயணம் துவக்கம்
காயம் காரணமாக அந்த அணியில் இடையில்தான் இணைந்தார் மேற்கிந்திய தீவுகளின் வீரர் கிறிஸ் கெயில். அவர் இணைந்ததும் அந்த அணியின் வெற்றிப்பயணம் சிறப்பாக துவங்கியது. தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஆனாலும் ப்ளே-ஆப் சுற்றிற்கு முன்னேறாதது குறித்து கிறிஸ் கெயில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் சிறந்த வீரரை உருவாக்கும்
இதுகுறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள கெயில், ஐபிஎல் போட்டிகளின் இந்த தோல்வி தங்களை உடைக்காமல் அணி வீரர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். ஐபிஎல் போட்டிகள் சிறந்த வீரரை உருவாக்கும் என்றும் வாழ்க்கை குறித்து புரிதலை ஏற்படுத்தும் எனறும் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ் கெயில் பேச்சு
தொடர்ந்து பேசிய அவர், கிரிக்கெட்டும் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் குறித்து கற்றுக் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து பேசிய அணியின் கேப்டன் கேஎல் ராகுல், இந்த சீசனில் அணி வீரர்கள் விளையாடிய விதம் பெருமிதத்தை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மீண்டும் வலிமையுடன் வந்து விளையாடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











