Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேட்ஸ்மேன்கள எப்படி தெறிக்க விடணும்னு அஸ்வின்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்.. குல்தீப் பரபர!

சென்னை : கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் ஒரு போட்டியிலும் குல்தீப் யாதவ் விளையாடவில்லை.

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் விளையாடாத நிலையில், இரண்டாவது போட்டியில் விளையாடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் சரியான இடத்தில் எவ்வாறு பௌலிங் செய்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுப்பது என்பது குறித்து அஸ்வினிடம் கேட்டறிந்ததாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

2வது போட்டியில் குல்தீப்

2வது போட்டியில் குல்தீப்

இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரின் ஒரு போட்டியிலும் குல்தீப் யாதவ் விளையாட வாய்ப்பு பெறவில்லை. கடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் விளையாட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் இன்று நடந்து முடிந்துள்ள இரண்டாவது போட்டியில் அவர் பங்கேற்று விளையாடினார்.

வீழ்த்திய குல்தீப்

வீழ்த்திய குல்தீப்

இந்தியா -இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயீன் அலி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் குல்தீப் யாதவ். இந்நிலையில் நம்முடைய அணி சிறப்பாக விளையாடும்போது அதனுடன் நாமும் இருக்க வேண்டும் என்று குல்தீப் யாதவ் குறப்பிட்டுள்ளார்.

கட்டுப்படுத்த வேண்டும்

கட்டுப்படுத்த வேண்டும்

அணிக்காக பௌலிங் போடும்போது கட்டுப்பாட்டுடன் எதிரணி ஸ்கோரை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதே தனது வேலையாக கருதுவதாக அவர் கூறியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாததால் நெருக்கடியை சந்தித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வினுடன் ஆலோசனை

அஸ்வினுடன் ஆலோசனை

இந்நிலையில் எவ்வாறு எந்த இடத்தில் பௌலிங் செய்து எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுப்பது என்பது குறித்து ஸ்பின்னர் அஸ்வினுடன் ஆலோசித்து பந்து வீசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த முதல் போட்டியில் தோல்வியுற்ற போதிலும் இரண்டாவது போட்டியில் அனைத்து வீரர்களும் கவனத்துடன் விளையாடியதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Story first published: Tuesday, February 16, 2021, 21:03 [IST]
Other articles published on Feb 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+