Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பந்த் மட்டும் இன்னும் கொஞ்ச நேரம் ஆடியிருந்தாருன்னா... இந்தியா வெற்றி பெற்றிருக்கும்..கம்பீர் உறுதி

டெல்லி : சிட்னியில் நடைபெற்ற இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான 3வது போட்டியை இரு அணிகளும் டிரா செய்துள்ளன.

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ரிஷப் பந்த் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் இந்த போட்டியில் பந்த் மட்டும் இன்னும் சிறிது நேரம் நின்று ஆடியிருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்திய வீரர்களின் கூட்டுமுயற்சி

இந்திய வீரர்களின் கூட்டுமுயற்சி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியை இரு அணிகளும் டிரா செய்துள்ளன. கடந்த 5வது நாள் ஆட்டத்தில் ரிஷப் பந்த், புஜாரா, அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோரின் கூட்டு முயற்சியால் இந்த போட்டி டிரா ஆனது.

97 ரன்கள் அடித்த பந்த்

97 ரன்கள் அடித்த பந்த்

போட்டியில் காயத்தால் அவதியுற்ற போதிலும் ரிஷப் பந்த், ஹனுமா விஹாரி மற்றும் அஸ்வின் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தனர். குறிப்பாக ரிஷப் பந்த் தன்னுடைய காயத்தின் இடையில் 97 ரன்களை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இந்தியா வெற்றி அடைந்திருக்கும்

இந்தியா வெற்றி அடைந்திருக்கும்

அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 97 ரன்களில் அவுட்டாகி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில் அவர் இன்னும் சிறிது நேரம் மைதானத்தில் தாக்கு பிடித்திருந்தால் இந்தியா சிட்னி போட்டியில் வெற்றி கண்டிருக்கும் என்று முன்னாள் இந்திய அணியின் துவக்க வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

வெற்றிக்கு குறைவான போட்டியில்லை

வெற்றிக்கு குறைவான போட்டியில்லை

அவ்வாறு நடந்திருந்தால் அது மிகச்சிறந்த வரலாற்று வெற்றியாக இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல புஜாராவின் ஆட்டத்தையும் அவர் வெகுவாக பாராட்டியுள்ளார். இந்த போட்டி டிரா ஆகியுள்ள போதிலும் இது வெற்றிக்கு சற்றும் குறைந்ததில்லை என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, January 13, 2021, 17:54 [IST]
Other articles published on Jan 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+