கிரிக்கெட் மேல அதிக விருப்பம் இருக்கு... அதுதான் தொடர்ந்து செயல்பட வச்சிக்கிட்டு இருக்கு
டெல்லி : கிரிக்கெட் மீது தனக்கு அளவு கடந்த விருப்பம் உள்ளதாகவும் அதுதான் தன்னை தொடர்ந்து செயல்பட வைத்து வருவதாகவும் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய என்சிஏ தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய கேரியரில் அதிகமான ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ள போதிலும் இந்த விருப்பமே தன்னை ஊக்குவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த விருப்பமே தன்னுடைய சிறப்பான திறமையை வெளிக் கொண்டுவர உதவியதாகவும் அவர் மேலும் கூறினார்.

ராகுல் டிராவிட் கருத்து
முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தன்னுடைய கேரியரில் சிறப்பாக செயல்பட்டவர். தற்போது என்சிஏ தலைவராகவும் செயல்பட்டு வரும் டிராவிட், அதிலும் தன்னுடைய சிறப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தான் கிரிக்கெட்டில் ஏற்ற இறக்கங்களை அதிகமாக சந்தித்ததாக அவர் கூறியுள்ளார்.

அமைதியாக இல்லை
கிரிக்கெட்டில் தனது பயணம் அமைதியாக இல்லை என்று கூறியுள்ள டிராவிட், ஆனால் கிரிக்கெட் மீதான தன்னுடைய விருப்பமே தன்னை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டுள்ளதாகவும், இந்த விருப்பமே தன்னுடைய கேரியரில் பல சாதனைகளை புரிய துணை நின்றதாகவும் கூறியுள்ளார்.

டிராவிட்டின் விருப்பம்
ட்ரூத் டாக்ஸ் நிகழ்ச்சிக்காக தொகுப்பாளர் ஆயாஷ் மேமனுடன் பேசிய ராகுல் டிராவிட், தான் சில காலங்களுக்கு மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும் என்றும் தான் இந்த துறையில் இருந்து விலகும்போதும் சிறப்பான இடத்தில் விட்டு செல்ல விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

செயல்பாடுகள் இருக்க வேண்டும்
மேலும் விளையாட்டில் இருக்கும்போது நமது வெற்றி தோல்விகள் அனைத்தும் உடனடியாக வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்று தெரிவித்துள்ள டிராவிட், அதற்கு ஏற்ப நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் சுட்டிக் காட்டினார். சில நேரங்களில் நாம் பெருமை கொள்ள முடியாத விஷயங்களையும் செய்ய விளையாட்டு நமக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.


Click it and Unblock the Notifications