Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

7வது ஐ.பி.எல். : டாப் 5 'சொதப்பல் மன்னர்கள்"

மும்பை: 7வது ஐ.பி.எல். போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு சொதப்பியவர்களில் யுவராஜ்சிங், கோரி ஆண்டர்சன், யூசுஃப் பதான், கவுதம் காம்பீர், மைக் ஹஸ்சி முக்கியமானவர்கள்.

7வது ஐ.பி.எல். போட்டிகளில் இதுவரை 30க்கும் மேற்பட்ட ஆட்டங்கள் முடிவடைந்துவிட்டன. ஜூன் 1-ந் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் நடப்பு ஐ.பி.எல். போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட யுவி உட்பட 5 வீரர்கள் தொடர்ந்துமே சொதப்பி வருவது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

யுவராஜ்சிங்

யுவராஜ்சிங்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடும் யுவராஜ்சிங் ரூ14 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர். இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய யுவி 141 ரன்களைத்தான் எடுத்திருக்கிறார். இதில் 1 அரை செஞ்சுரி, 1 டக் அவுட், 9 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் அடங்கும்.

கோரி ஆண்டர்சன்

கோரி ஆண்டர்சன்

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் ரூ4.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் 36 பந்துகளில் சதமடித்து உலக சாதனை படைத்தவர் கோரி ஆண்டர்சன். ஆனால் தற்போதைய ஐ.பி.எல். போட்டிகளில் சோபிக்கவில்லை. இதுவரை 114 ரன்களைத்தான் எடுத்திருக்கிறார் கோரி. இதில் 10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் அடங்கும்.

யூசுஃப் பதான்

யூசுஃப் பதான்

ஒவ்வொரு ஐ.பி.எல். போட்டியிலும் யூசுஃப் பதான் சாதிப்பார்.. சாதிப்பார் என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறவர். ஆனால் ஐ.பி.எல். போட்டிகளில் என்ன அலர்ஜியோ இவருக்கு.. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் யூசுஃப் பதான் 6 போட்டிகளில் விளையாடி மொத்தமே 59 ரன்களைத்தான் எடுத்திருக்கிறார். மோசமான ஆட்டத்தால் ஒரு போட்டியில் விளையாடாமல் ஒதுக்கியும் வைக்கப்பட்டார்.

கவுதம் காம்பீர்

கவுதம் காம்பீர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் இம்முறை படு சொதப்பல். 8 போட்டிகளில் விளையாடி 175 ரன்களைத்தான் எடுத்திருக்கிறார். இதில் ஹாட்ரிக் டக் அடித்த வரலாற்று சாதனை வேற..

மைக் ஹஸ்சி

மைக் ஹஸ்சி

மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் மைக் ஹஸ்சி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 6 ஆண்டுகாலம் இடம்பெற்று அந்த அணியின் வெற்றிக்கான தூண்களில் ஒன்றாக இருந்தவர். இடப்பெயர்ச்சி கை கொடுக்கவில்லை போல.. 4 போட்டிகளில் விளையாடி மொத்தமே 30 ரன்களைத்தான் எட்டியிருக்கிறார் ஹஸ்சி.

Story first published: Friday, May 9, 2014, 16:12 [IST]
Other articles published on May 9, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+