For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி ஹால் ஆப் ஃபேம் பட்டியலில் ராகுல் டிராவிட், ரிக்கி பான்டிங்!

டப்ளின்: ரிக்கி பான்டிங் , ராகுல் டிராவிட், கிளேர் டெய்லர் ஆகியோர் 2018 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஹால் ஆப் பேம் பட்டியலில் புதியதாக இணைக்கப்பட்டுள்ளனர். இது அவர்களது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய கவுரவம் ஆகும்.

இதற்கான அறிவிப்பை ஐசிசி முதன்மை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களை கவுரவிக்கவே இந்த ஹால் ஆப் பேம் இருக்கிறது.

தலைசிறந்த வீரர்களின் கிரிக்கெட் பங்களிப்பை போற்றும் வகையில் ரிக்கி பாண்டிங், ராகுல் டிராவிட், கிளேர் டெய்லர் ஆகியோர் 2018 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஹால் ஆப் பேம் பட்டியலில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

ரிக்கி பான்டிங்

ரிக்கி பான்டிங்

ஹால் ஆப் பேமில் இடம் பெறும் 25ஆவது ஆஸ்திரேலியா வீரர். ரிக்கி பாண்டிங் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இரண்டாமிடம் குவித்த வீரர் (13378 ரன்கள் )

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த மூன்றாவது வீரர் (13704 ரன்கள் ). ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா அணிக்கு இரண்டு முறை கேப்டனாக இருந்து பெற்று தந்தவர் (2003 மற்றும் 2007). 1999 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற அணியில் வீரராக பங்காற்றியவர். இரண்டு முறை ஐசிசி கிரிக்கெட்டர் ஆப் தி இயர் விருது வாங்கியவர் (2006 மற்றும் 2007)

பான்டிங் மகிழ்ச்சி

பான்டிங் மகிழ்ச்சி

இதுகுறித்து பான்டிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஐசிசி என்னை மிகவும் கவுரவித்து பெருமையப்படுத்தியுள்ளது. ஒரு வீரனாக எப்பொழுதும் எனது சிறந்த பங்களிப்பை அளித்துள்ளேன். எனது அணிக்காக நன் எப்போதுமே பெருமையடைகிறேன் என்றார் பான்டிங்.

ராகுல் டிராவிட்:

ராகுல் டிராவிட்:

இந்த பெருமையை பெறும் ஐந்தாவது இந்திய வீரர் ராகுல் டிராவிட். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்களை கடந்த 7 வீரர்களில் இவரும் ஒருவர்.இந்திய அணியில் சச்சின் மட்டுமே இதனை புரிந்துள்ளார். 2004 ஆம் ஆண்டு ஐசிசி கிரிக்கெட்டர் ஆப் தி இயர் விருது வாங்கியவர். டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பர் அல்லாத வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் (210 கேட்ச்கள்) டெஸ்ட் போட்டிகளில் அதிக பந்துகளை சந்தித்த வீரர் என்ற பெருமையை கொண்டவரும் இவரே ஆகும் (மொத்தம் - 31258 பந்துகள் (அதாவது 5000 ஓவர்களுக்கு மேல் !!))

டிராவிட் பெருமிதம்

டிராவிட் பெருமிதம்

ஐசிசி கெளரவம் குறித்து சுவர் என செல்லமாக அழைக்கப்படும் ராகுல் டிராவிட் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ஒட்டுமொத்தமாக உலகின் தலை சிறந்த வீரர்கள் பட்டியலில் இடம்பெறுவது சிறப்பு. இதுபோன்ற நிகழ்வுகள் ஒரு வீரரை பெருமைப்படுத்தும் என்றார் டிராவிட்.

 கிளேர் டெய்லர்

கிளேர் டெய்லர்

கிளேர் டெய்லர், இந்த பெருமையை பெரும் ஏழாவது பெண் கிரிக்கெட்டர் ஆவார். இங்கிலாந்தில் இருந்து மூன்றாவது வீராங்கனை ஆவார். மகளிர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களையும் ஒருநாள் போட்டிகளில் 4000 ரன்களையும் கடந்த நான்கு வீரர்களில் இவரும் ஒருவர். பெண்கள் உலகக்கோப்பை மற்றும் டி20 போட்டித்தொடர்களில் தொடர் நாயகன் விருதை பெற்றவர் (ஆண்டு : 2009) இதுகுறித்து அவர் கூறுகையில், உலகின் தலைசிறந்த ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் வீரர்கள் வரிசையில் எனது பெயர் இடம் பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.







Story first published: Monday, July 2, 2018, 17:25 [IST]
Other articles published on Jul 2, 2018
English summary
Dravid,Ponting amd ClaireTaylor have been find place in New Hall of fame 2018
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X