Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹாட்ரிக் சாதனை.. இரானி கோப்பையில் புதிய வரலாறு படைத்த ஹனுமா விஹாரி..

நாக்பூர் : இந்திய டெஸ்ட் அணியில் கடந்த ஆண்டு இடம் பிடித்த ஹனுமா விஹாரி, உள்ளூர் கிரிக்கெட் போட்டியான இரானி கோப்பை போட்டியில் ஹாட்ரிக் சாதனை ஒன்றை செய்துள்ளார்.

இரானி கோப்பை வரலாற்றில் தொடர்ந்து மூன்று இன்னிங்க்ஸ்களில் மூன்று சதம் அடித்து புதிய வரலாற்று சாதனை செய்துள்ளார் ஹனுமா விஹாரி.

இரானி கோப்பை போட்டி

இரானி கோப்பை போட்டி

இரானி கோப்பை போட்டி ரஞ்சி தொடரை வென்ற அணிக்கும், இதர இந்திய வீரர்கள் கொண்ட ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கும் இடையே நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டு ரஞ்சி தொடரைக் கைப்பற்றிய விதர்பா அணிக்கும், இதர இந்திய வீரர்கள் அணிக்கும் இடையே இரானி கோப்பை போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது.

இரண்டு சதங்கள்

இரண்டு சதங்கள்

இதில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி சார்பில் பங்கேற்றுள்ள ஹனுமா விஹாரி இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் 114 மற்றும் 180 என இரண்டு சதங்கள் அடித்தார். இதன் மூலம் இரண்டு முக்கிய சாதனைகளை செய்துள்ளார் ஹனுமா விஹாரி.

தவான் சாதனை

தவான் சாதனை

2011இல் தவான் இரானி கோப்பை போட்டியில் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் சதம் அடித்து இருந்தார். அதற்கு பின்னர் தற்போது ஹனுமா விஹாரி இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் சதம் அடித்து அதே சாதனையை செய்துள்ளார்.

டெஸ்ட் அணியில் உறுதி

டெஸ்ட் அணியில் உறுதி

இது வரை எந்த வீரரும் இரானி கோப்பையில் இந்த சாதனையை செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹனுமா விஹாரி இந்த சாதனை சதங்கள் மூலம் டெஸ்ட் அணியில் தன் இடத்தை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார்.

Story first published: Saturday, February 16, 2019, 15:16 [IST]
Other articles published on Feb 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+