இதுக்கும் மேல பொறுக்க முடியாது.. வலியில் துடித்து.. பாதியில் வெளியேறிய இந்திய வீரர்.. என்னாச்சு?
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஹனுமா விஹாரி மூன்று முறை காயம் அடைந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியது.
இந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியாவின் பவுலிங் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளது. இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டை இழந்து 249 ரன்கள் எடுத்துள்ளது.

பீல்டிங்
இன்று இந்திய அணியின் பீல்டிங் சிறப்பாக இருந்தது. நேற்று இந்திய அணி மோசமான பீல்டிங் காரணமாக மூன்று முறை விக்கெட் எடுக்கும் வாய்ப்பை தவற விட்டது. ஆனால் இன்று ஜடேஜா, ரஹானே, ஹனுமா விஹாரி என்று எல்லோரும் மிகவும் சிறப்பாக பீல்டிங் செய்தனர்.

எப்படி நடந்தது
அந்த வகையில் இன்று ஹனுமா விஹாரி சில்லி பாயிண்ட் மற்றும் ஷார்ட் லெக் திசையில் பீல்டிங் செய்தார். அதிலும் சில்லி பாயிண்ட் திசையில் இவர் பீல்டிங் செய்த போது அடுத்தடுத்து காயம் அடைந்தார். பந்தை தடுக்க முயன்ற விஹாரிக்கு காலில் அடிபட்டது.

கண்டுகொள்ளவில்லை
ஆனால் காயத்தை கண்டுகொள்ளாமல் விஹாரி தொடர்ந்து பீல்டிங் செய்தார். ஆனால் மேத்யூ வேட் பேட்டிங்கில் மீண்டும் விஹாரி காயம் அடைந்தார். இவரின் முட்டிக்கு கீழ் பகுதியில் மொத்தம் மூன்று முறை காயம் ஏற்பட்டது. இதில் மூன்றாவது முறை காயம் ஏற்பட்ட போது விஹாரி துடித்து போனார்.

வெளியேறினார்
இதை தொடர்ந்து வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆட்டத்தின் பாதியில் விஹாரி வெளியேறினார். தனது காலில் இருக்கும் பேட்களை நீக்கிவிட்டு, காயம் அடைந்த பகுதிகளில் விஹாரி ஐஸ் வைத்தார். அதன்பின் சில நிமிடம் கழித்து மீண்டும் பீல்டிங் செய்ய வந்தார். இவர் காயம் அடைந்த நிலையில் அடுத்த போட்டியில் விஹாரி ஆடுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications