
எப்படி
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமாக சொதப்பி வரும் ஆல் ரவுண்டர் பேட்ஸ்மேன் ஒருவர் மீது பிசிசிஐ கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ரஹானே, பண்ட், சுப்மான் கில், ஜடேஜா , பும்ரா, அஸ்வின் போன்ற வீரர்கள் சிறப்பாக ஆடி வருகிறார்கள்.

ஆனால் என்ன
ஆனால் ஆல் ரவுண்டர் வீரர் ஹனுமா விஹாரி சரியாக ஆடுவது. முதல் டெஸ்ட் போட்டியில் மோசமாக சொதப்பிய ஹனுமா விஹாரி, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுமாராகவே ஆடினார். இவர் பெரிய அளவில் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தவில்லை.

பவுலிங்
இவர் ஆல் ரவுண்டர் என்றாலும் கூட பவுலிங் செய்வது இல்லை. 5 பவுலர்களுடன் இந்திய அணி களமிறங்குவதால் இவருக்கு பவுலிங் வாய்ப்பு கிடைப்பது இல்லை. உமேஷ் யாதவ் காயம் காரணமாக வெளியேறிய போதும் கூட ஹனுமா விஹாரி பவுலிங் செய்யவில்லை.

ஏன்
பேட்டிங் மட்டுமே செய்வார் என்றால் .. இவருக்கு பதிலாக ராகுலை அணியில் எடுக்கலாம். விஹாரியை விட ராகுல் நன்றாக பேட்டிங் செய்வார். இதனால் ஹனுமா விஹாரியை இந்திய அணியில் இருந்து நீக்கும் எண்ணத்தில் பிசிசிஐ உள்ளது.

கடைசி
அதுவும் ஒரு தொடரில் இருந்து நீக்காமல் மொத்தமாக இவரை இந்திய அணியில் இருந்து நிரந்தரமாக நீக்கும் எண்ணத்தில் பிசிசிஐ உள்ளது. இந்த ஆஸ்திரேலிய தொடர்தான் விர்த்திமான் சாகா, விஹாரி இருவருக்கும் கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications