For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹனுமா விஹாரிக்கு இவ்ளோ "க்யூட்டான" மனைவியா!.. இதுவரை பார்த்ததில்லையே - வியப்பில் ரசிகர்கள்

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி தனது மனைவியின் புகைப்படங்களை சமீபத்தில் பகிர ஏகத்துக்கு வைரல் ஆகியிருக்கிறார் மிஸஸ் விஹாரி.

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த லக்ஷ்மன், ரஹானவோ, புஜாராவோ அல்ல.. சாட்சாத் ஹனுமா விஹாரி என அடித்துக் கூறலாம்.

அந்தளவுக்கு, லோ ஆர்டரில் இறங்கி எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார். இன்றைய தேதிக்கு, இவரை அணியில் டிராப் செய்யவே யோசிக்கின்றனர். குறிப்பாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தோல்விக்கு பிறகு.

மறக்க முடியா பார்ட்னர்ஷிப்

மறக்க முடியா பார்ட்னர்ஷிப்

ஹனுமா விஹாரி... இந்திய டெஸ்ட் அணியின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒருவர் எனலாம். லோ ஆர்டரில் இவரது பங்களிப்பு அணிக்கு பெருமளவில் கைக்கொடுக்கிறது. குறிப்பாக, இந்த வருட தொடக்கத்தில், ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய அணிக்கு சிட்னியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில், இவர் அஷ்வினுடன் 2வது இன்னிங்ஸில் சேர்த்து அமைத்த பார்ட்னர்ஷிப்பை எவருமே மறக்க முடியாது.

 ரசிகர்கள் மனதில்

ரசிகர்கள் மனதில்

161 பந்துகளை சந்தித்து வெறும் 23 ரன்கள் எடுத்து மெகா கட்டைப் போட்டு, ஆஸ்திரேலியாவின் வெற்றிக் கனவை சுக்கு நூறாக்கினார். மொத்தம் 237 நிமிடங்கள் களத்தில் கல்லு மாதிரி நின்றிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த 161 பந்துகளில் எப்படியும் 50 பந்துகள் அவரை உடலில் ஒரு பாகம் கூட விட்டுவைக்காமல் தாக்கியதையும் மறக்க முடியாது. அத்தனை அடியையும் தாங்கிக் கொண்டு நின்று, மேட்சை டிராவக்கினார். அந்தப் போட்டியிலேயே ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.

வலுக்கும் கோரிக்கை

வலுக்கும் கோரிக்கை

எனினும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவருக்கு 'சுழலின்' சூழல் காரணமாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதாவது, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்வின், ஜடேஜா என இருவரும் விளையாடியதால், ஒரு பேட்ஸ்மேனாக விஹாரிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால், இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்க, இப்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விஹாரி களமிறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பல எக்ஸ்பெர்ட்ஸ் விஹாரி குறித்து தினம் பேசி வருகின்றனர்.

குடும்பத்துடன் புகைப்படம்

குடும்பத்துடன் புகைப்படம்

நிலைமை இப்படியாக இருக்க, தற்போது 'கேஷுவல்' மோடில் இருக்கும் விஹாரி, தனது மனைவி ப்ரீத்தி ராஜின் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி. விராட் கோலி மனைவி முதல் சாஹலின் மனைவி வரை அறிந்து வைத்திருந்த நம் ரசிகர்கள், விஹாரி குறித்தோ, அவரது குடும்பம் குறித்தோ பெரிதாக கண்டுகொண்டதில்லை. ஆகையால், அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கூட பலருக்கும் தெரியாது. இந்நிலையில், விஹாரி தனது மனைவியுடன் இங்கிலாந்தில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட, தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கலக்குங்க ப்ரோ

கலக்குங்க ப்ரோ

இதற்கு முன் அவர் தனது குடும்பம் குறித்து வெளிப்படையாக இருந்தாலும், ரசிகர்கள் பெரிதாக கண்டுகொள்ளாத நிலையில், இங்கிலாந்து தொடர் நெருங்க நெருங்க விஹாரியின் வேல்யூ உயர்ந்து வருகிறது. அதன் காரணமாக விஹாரியின் இதர விவரங்கள் குறித்து தெரிந்து கொள்வதிலும் ரசிகர்கள் ஆர்வம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இங்கிலாந்து தொடரில் கலக்குங்க ப்ரோ! அட்வான்ஸ் வாழ்த்துகள்!.

Story first published: Monday, July 5, 2021, 21:57 [IST]
Other articles published on Jul 5, 2021
English summary
Hanuma Vihari Shares Wife Preethiraj picture - ஹனுமா விஹாரி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+