அவரை நீக்க முடியாது.. மோசமாக ஆடியும்.. இளம் வீரருக்கு அடித்த அதிர்ஷடம்.. இந்திய அணியில் வாய்ப்பு
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் ஒருவர் மோசமாக ஆடிய நிலையிலும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறுகிறார்கள்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடக்க உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இன்னும் ஆடும் 11 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்படவில்லை. நாளை மதியம் இதற்கான அணி விவரம் வெளியிடப்படலாம் என்று கூறுகிறார்கள்.

எப்படி
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஹனுமா விஹாரி இடம்பெற மாட்டார் என்று கூறப்பட்டது. இவர் பவுலிங் ஆல் ரவுண்டர் என்பதால் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆனால் கடந்த போட்டியில் இவர் பவுலிங் போட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பேட்டிங்
அதேபோல் இவர் பேட்டிங்கிலும் பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கவில்லை. இவரின் பேட்டிங் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. இதன் காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இவர் ஆட வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வந்தது.

வாய்ப்பு
ஆனால் அடுத்த போட்டியில் இவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறுகிறார்கள். கே. எல் ராகுல் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறி உள்ளார். இதனால் ஹனுமா விஹாரியை நீக்கும் எண்ணத்தை பிசிசிஐ கைவிட்டுள்ளது.

ஹனுமா விஹாரி
ராகுல் இல்லாத நிலையில் ஹனுமா விஹாரியை தவிர வேறு யாரையும் அணியில் களமிறக்க முடியாது. பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோருக்கு ஏற்கனவே அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு சோதிக்கப்பட்டுவிட்டது. இதனால் அவர்கள் மீண்டும் அணியில் இடம்பெற மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications