என்ன நடந்தாலும்.. அவரை நீக்க முடியாது.. இளம் வீரருக்கு முழு சப்போர்ட் தரும் பிசிசிஐ.. அதிரடி முடிவு
சிட்னி: இளம் வீரர் ஹனுமா விஹாரியை அடுத்த டெஸ்ட் போட்டியில் நீக்கும் எண்ணத்தில் இந்திய அணி இல்லை என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவாது டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை நடக்க உள்ளது. பாக்சிங் டே போட்டியான இந்த டெஸ்ட் மேட்ச் அதிக கவனம் பெற்றுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா மிக மோசமாக தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது போட்டியில் எப்படியவாது வெற்றிபெற வேண்டும் என்ற முடிவில் இந்திய அணி உள்ளது.

எப்படி
இந்த போட்டியில் இந்திய அணியின் முக்கியமான வீரர்களை பலர் நீக்கப்பட்டு வேறு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தகவல்கள் வந்தது. இந்திய அணியில் பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி, விர்திமான் சாகா, முகமது சமி , கோலி ஆகியோர் அடுத்த போட்டியில் இடம்பெற மாட்டார்கள் என்றது தகவல்கள் வந்தது.

யார்
இவர்களுக்கு மாற்றாக சுப்மான் கில், பண்ட், கே. எல் ராகுல், ஜடேஜா, முகமது சிராஜ் ஆகியோர் அணியில் இடம் பிடிப்பார்கள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இந்திய அணியில் ஹனுமா விஹாரி நீக்கப்பட மாட்டார் என்று கூறப்படுகிறது. இவர் அணியில் இடம்பிடிப்பார்.

ஜடேஜா
இவர் நன்றாக பவுலிங் செய்வார் என்பதால் ஹனுமா விஹாரிக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதேபோல் ஜடேஜாவிற்கும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறுகிறார்கள். இவருக்கு பதிலாக இந்திய அணியில் பண்ட் இடம்பெற மாட்டார். கே.எல் ராகுல் கீப்பராக இருப்பார்.

அணியில் யார் இடம்பெறுவார்
இந்திய அணியில் சுப்மான் கில், மயங்க் அகர்வால், ரஹானே, புஜாரா, கே. எல் ராகுல், ஹனுமா விஹாரி, ஜடேஜா, சிராஜ், பும்ரா, அஸ்வின், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications