அனுஷ்கா சர்மாவின் பிறந்தநாள்... செல்லப்பெயரால் வாழ்த்துகூறிய யுவராஜ்சிங்
மும்பை : பாலிவுட் நடிகையும் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அனுஷ்கா சர்மாவின் பிறந்தநாளையொட்டி, தனது டிவிட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் யுவராஜ் சிங், அவரது செல்லப்பெயரை குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேபோல, சாய்னா நேவால், மாதுரி தீக்ஷித் உள்ளிட்டவர்களும் அனுஷ்கா சர்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

விராட் கோலியின் மனைவி
பாலிவுட் நடிகையும் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் காதல் மனைவியுமான அனுஷ்கா சர்மா தன்னுடைய பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். நாளை வரை கொரோனா வைரஸ் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய வீட்டிலேயே பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவரும் அனுஷ்கா சர்மாவிற்கு பல விளையாட்டு வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆதர்ச தம்பதி
விராட் கோலி -அனுஷ்கா சர்மா காம்பினேஷன் விளம்பர உலகில் மட்டுமின்றி, தம்பதியாகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து பதிவிடும் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்காகவே காத்திருந்து, லைக்குகளையும், ஷேர்களையும் அவர்களது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இவர்கள் போடும் சாதாரண பதிவுகளுக்கும் லட்சக்கணக்கில் லைக்குகளை அவர்கள் அளிக்கின்றனர்.

பிரபலங்கள் வாழ்த்து
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு பிரபலங்களும் வீடுகளில் முடங்கியுள்ளனர். அனுஷ்கா சர்மாவும், விராட்கோலியும் வீட்டில்தான் உள்ளனர் என்றபோதிலும், தினமும் கொண்டாட்டமாக இவர்களது வாழ்க்கை நகர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று பிறந்த நாளை கொண்டாடிவரும் அனுஷ்காவிற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், அவரது செல்லப்பெயரான 'ரோசி பேபி' என்பதை குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவருடைய வாழ்வில் வெற்றி, சந்தோஷம் அனைத்தும் கிடைக்கவும் வாழ்த்தியுள்ளார்.

ரசிகர்களும் வாழ்த்து
இதேபோல இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும் பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித்தும் அனுஷ்கா சர்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் ஏராளமான ரசிகர்களும், தங்களது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களின் மூலம் அனுஷ்கா சர்மாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications