Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே ரசிகர்களுக்கு அட்டகாச செய்தி.. ஆஸ்திரேலிய தொடர் முதல் சேப்பாக்கத்திற்கு புது சிறப்பு- ரெடியா

சென்னை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் மூலம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் மோதவுள்ளது. இதில் டெஸ்ட் போட்டிகள் பார்டர் கவாஸ்கர் கோப்பையாக நடைபெறுகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் மீது கவனம் செலுத்தி வந்த ரசிகர்கள், ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதை கவனிக்கவில்லை.

சேப்பாக்கம் மைதானம்

சேப்பாக்கம் மைதானம்

இந்தியாவின் புகழ்பெற்ற மைதானங்களில் சேப்பாக்கம் மைதானத்திற்கு தனிச்சிறப்பு உள்ளது. 1934ம் ஆண்டு முதல் சர்வதேச போட்டி நடைபெற்றது. இந்தியா முதன்முதலில் பெற்ற டெஸ்ட் வெற்றி இந்த மைதானத்தில் தான் ஆகும். இப்படிப்பட்ட மைதானத்தில் தான் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் 3வது ஒருநாள் போட்டியை விளையாடவுள்ளனர். இந்த போட்டி வரும் மார்ச் 22ம் தேதியன்று நடைபெறவுள்ளது.

மகிழ்ச்சி செய்தி

மகிழ்ச்சி செய்தி

இந்நிலையில் இந்த போட்டிக்குள் சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக 2 ஸ்டேண்டுகள் திறக்கப்படவுள்ளன. மேலும் மைதானம் முழுவதும் புதுப்பிக்கும் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த மைதானத்தில் உள்ள 2 ஸ்டேண்டுகள் பயன்படுத்தப்படாமலேயே உள்ளன. அரசு அனுமதி வழங்காததால் திறக்கப்பாடாமலேயே உள்ளது. இதனால் பல சர்வதேச போட்டிகள் இங்கிருந்து தள்ளிப்போய்விட்டன. இதற்காக தான் கடந்தாண்டு புதிதாக ஸ்டேண்டுகள் கட்டும் பணிகள் தொடங்கின.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

ரூ.139 கோடியில் புதிய ஸ்டேண்டுகளை அமைக்க, தமிழக கிரிக்கெட் வாரியத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி தற்போது 31,140 பேர் ஒன்றாக அமர்ந்து போட்டிகளை பார்க்கலாம். புதுப்பிப்பு பணிகள் முடிந்தவுடன் கூடுதல் ஸ்டேண்டுகள் மூலமாக 5,306 பேர் கூடுதலாக போட்டியை காணும் வகையில் உருவாக்கப்படுகிறது.

தோனிக்கு ஸ்பெஷல்

தோனிக்கு ஸ்பெஷல்

சேப்பாக்கம் மைதானம் தான் சென்னை சூப்பர் கிங்ஸின் ஹோம் மைதானம் ஆகும். 2008ம் ஆண்டு முதல் சிஎஸ்கேவின் கோட்டையாக உள்ளது. இங்கு விளையாடிய பிறகு தான் ஓய்வு பெறுவேன் என தோனியும் கூறியுள்ளார். அதன்படி 2019ம் ஆண்டுக்கு பின் முதல்முறையாக இந்தாண்டு சென்னையிலும் ஐபிஎல் போட்டிகள் நடக்கின்றன. இதில் கூடுதலாக ரசிகர்கள் அமர்ந்து தோனியை வழியனுப்பி வைப்பார்கள் என தெரிகிறது.

Story first published: Monday, February 6, 2023, 15:29 [IST]
Other articles published on Feb 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+