Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது ஏன்..?? தோனி மீது ஹர்பஜன் சிங் பரபரப்பு புகார்

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைச்சிறந்த சுழற்பந்துவீச்சாளராக விளங்கியவர் ஹர்பஜன் சிங்.

Recommended Video

Harbhajan singh's List of controversies in Cricket | Harbhajan Retires | OneIndia Tamil

கடந்த வாரம் ஹர்பஜன் சிங் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்

இந்திய கிரிக்கெட் அணியில் தாம் ஏன் நீண்ட காலமாக இடம்பெறவில்லை என்பது குறித்து ஹர்பஜன் பரபரப்பு புகார் ஒன்றை தோனி மீது கூறியுள்ளார்.

ஹர்பஜன் வாழ்க்கை

ஹர்பஜன் வாழ்க்கை

1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட்டில் ஹர்பஜன் சிங் பங்கேற்றார். 17 ஆண்டுகளாக இந்தியாவுக்கு விளையாடிய ஹர்பஜன் சிங் டெஸ்டில் 417 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 269 விக்கெட்டுகளையும், டி20 போட்டியில் 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கடைசியாக ஹர்பஜன் சிங் 2015ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணிக்காக விளையாடவில்லை.

பதிலே வரவில்லை

பதிலே வரவில்லை

இந்த நிலையில், இந்தியாவுக்காக ஏன் இவ்வளவு நாள் விளையாடவில்லை என்பது குறித்து ஹர்பஜன் சிங் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், இந்திய அணியில் எனக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்பட்டது என்பது குறித்து அப்போதைய கேப்டன் தோனியிடம் கேட்க முயற்சிப்பேன்.

விளக்கம் தரவில்லை

விளக்கம் தரவில்லை

ஆனால் எனக்கு தோனியிடமிருந்து எந்த விதமான பதிலும் வராது. இதனால் எனக்கு ஏன் இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதில்லை என்பது குறித்து கேட்பதையே நிறுத்திவிட்டேன்.கேட்டாலும் பதில் வராது என்பதால், நான் அந்த கட்டத்திலிருந்து நகர்ந்துவிட்டேன். எனக்கு உரிய விளக்கம் கிடைக்காமல் இருந்தது மன வருத்தத்தை அளித்தது.

தொடர் புறக்கணிப்பு

தொடர் புறக்கணிப்பு

2016 டி20 உலகக் கோப்பை அணியிலும் ஹர்பஜன் சிங் இடம்பெற்று இருந்தார். ஆனால் ஒரு போட்டியில் கூட களமிறங்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வந்த ஹர்பஜன் சிங், 2018ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடினார். அப்போது எல்லாம் தோனி குறித்து வாய் திறக்காத ஹர்பஜன் சிங், முதல் முறையாக தோனி மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார். ஆனால் ஹர்பஜன் கூறிய காலக்கட்டத்தில் அஸ்வின், ஜடேஜா, குல்தீப், சாஹல் என பல இளம் வீரர்கள் அணியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, December 31, 2021, 17:03 [IST]
Other articles published on Dec 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+