அஸ்வின் மீது வன்மத்தை கொட்டிய ஹர்பஜன் சிங்.. பொறாமை பச்சையா தெரியுது சார்! இதை பாருங்க
மும்பை : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அஸ்வினுக்கு Wild card என்ட்ரி போல் வாய்ப்பு தற்போது கடைசி நேரத்தில் கிடைத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை தொடங்கக்கூடிய முதல் ஒருநாள் போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் கலக்கினால் அவர் உலகக்கோப்பை தொடருக்கு செல்ல முடியும்.
அப்படி நடக்கும் பட்சத்தில் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடிய கோலி மற்றும் அஸ்வின் ஆகியோர் 2023 உலக கோப்பையிலும் விளையாடி இருக்கிறார்கள் என்ற பெருமை சேரும்.

இந்த நிலையில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கும் உலக கோப்பை தொடரில் பங்கேற்க ஒரு வாய்ப்பு இருக்கிறது. பல முன்னாள் வீரர்கள் அஸ்வினையும் வாஷிங்டன் சுந்தரையும் ஒப்பிடுவதை தவறு என்றும் அஸ்வின் தான் அணியில் இருக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள். ஆனால் ஹர்பஜன்சிங் மட்டும் அஸ்வினுக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறார்.
ஏனென்றால் சமீபத்தில் தான் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஹர்பஜன்சிங் ரெக்கார்டை முறியடித்தார். இதற்கு பொறாமைப்படும் வகையில் அவர் தெரிவித்த கருத்தை தற்போது பார்க்கலாம். வாஷிங்டன் சுந்தரால் பவர் பிளேவில் பந்து வீச முடியும்.
மேலும் அவர் பில்டிங்கில் சிறந்து விளங்க கூடியவராக இருக்கிறார். மேலும் அவர் பேட்டிங் வரிசையில் இடது கை பேட்ஸ்மேன் ஆகவும் இருக்கிறார். எனவே ஒரே வீரர் உங்களுக்கு இத்தனை விஷயத்திலும் கை கொடுக்கிறார். இதனால் அஸ்வின் விட அக்சர் பட்டேலுக்கு தான் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
இதனால் தான் ஆசியக் கோப்பை தொடரின் இறுதி போட்டியின் போது அக்சர் பட்டேல் காயம் அடைந்தவுடன் அணி நிர்வாகம் வாஷிங்டன் சுந்தரை கொழும்புவுக்கு வர சொல்லி இருந்தது. மேலும் அவர் பிளேயிங் லெவனினும் இடம்பெற்று இருந்தார். இதன் காரணமாக அஸ்வினை விட வாஷிங்டன் சுந்தர் தான் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும் என்று கூறியுள்ளார். ஹரபஜனின் இந்த கருத்துக்கு இவ்வளவு பொறாமை இருக்கக் கூடாது சார் என்று பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications