For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வினால் தான் தொடர் போச்சு… அபாண்டமாக பழி போடும் ஹர்பஜன்

Recommended Video

நான்காவது டெஸ்ட் : அஸ்வின் மேல் பழி போடும் ஹர்பஜன்- வீடியோ

மும்பை : இந்தியா நான்காவது டெஸ்ட் போட்டியில் தோற்று, இங்கிலாந்துக்கு எதிரான தொடரையும் இழந்துள்ளது. இதற்கு பலரும் பல விமர்சனங்கள் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், ஹர்பஜன், இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் சரியாக பந்து வீசாததே இந்தியாவின் தோல்விக்கு காரணம் என கூறியுள்ளார்.

இங்கிலாந்தின் மொயீன் அலி சுழல் பந்துகளில் இந்தியாவை தடுமாற வைத்து, இங்கிலாந்துக்கு வெற்றி தேடித் தந்தார். அஸ்வின் அதை செய்யவில்லை என குறை கூறி இருக்கிறார் ஹர்பஜன்.

மொயீன் அலி எங்கே, அஸ்வின் எங்கே?

மொயீன் அலி எங்கே, அஸ்வின் எங்கே?

ஹர்பஜன் இது குறித்து கூறுகையில், "அந்த ஆடுகளத்தில் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு நிறைய உதவி இருந்தது. மொயீன் அலி 9 விக்கெட்கள் எடுத்தார். அஸ்வின் 3 விக்கெட்கள் மட்டுமே எடுத்தார்"

மொயீன் அலி எப்படி வீழ்த்தினார்

மொயீன் அலி எப்படி வீழ்த்தினார்

"அந்த ஆடுகளத்தில் இருந்த சொரசொரப்பான பகுதியில் பந்தை வீசி இருந்தாலே, நிறைய விக்கெட்கள் கிடைத்து இருக்கும். அதை தான் மொயீன் அலி செய்தார். அதிக விக்கெட்கள் எடுத்தார்" என கூறினார் ஹர்பஜன்.

அஸ்வினால் தான் போச்சு

அஸ்வினால் தான் போச்சு

மேலும், "முதல் முறையாக இங்கிலாந்து சுழல் பந்துவீச்சாளர்கள், இந்திய சுழல் பந்துவீச்சாளர்களை விட நன்றாக வீசுவதை பார்க்கிறேன். அஸ்வின் விக்கெட் எடுக்க முடியாததால் தான் நாம் 1-3 என தொடரை இழந்துள்ளோம்" என கடுமையாக கூறினார்.

மொயீன் அலியை சமாளிக்காத இந்தியா

மொயீன் அலியை சமாளிக்காத இந்தியா

"மொயீன் அலியின் பந்துவீச்சை சமாளிக்க இந்திய அணி இன்னும் ஒரு வழியை கண்டுபிடிக்கவில்லை. 2014ஆம் ஆண்டும் அவர்தான் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார்" எனவும் கூறினார் ஹர்பஜன்.

Story first published: Wednesday, September 5, 2018, 18:10 [IST]
Other articles published on Sep 5, 2018
English summary
Harbhajan blames ashwin for 4th test loss. Moeen Ali took 9 Wickets, while ashwin managed only 3.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X