Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய விக்கெட்களை வீழ்த்த ஹர்பஜன் செய்த உதவி... பலன் பெற்ற மொயீன் அலி..

லண்டன்: மொயீன் அலி விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய போது, ஹர்பஜனிடம் ஆலோசனை கேட்டதாகவும், அவர் கூறிய ஆலோசனைகளை கொண்டு விக்கெட் வீழ்த்தியதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள், இந்தியா தன் முதல் இன்னிங்க்சை ஆடி வந்தது. அப்போது மற்ற இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் விக்கெட்கள் எடுத்தனர். மொயீன் அலியால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை.

Harbhajan helped Moeen Ali in 5th test to get wickets

நான்காம் போட்டியில் 9 விக்கெட்கள் எடுத்த அவர், என்ன தவறு செய்கிறோம் என்பதை அறிய வர்ணனை அறையில் இருந்த இந்திய சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜனிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.

ஹர்பஜன், "நான்காம் போட்டி நடைபெற்ற ஆடுகளத்தில் பள்ளங்கள் இருந்தன. இங்கே அவ்வளவாக இல்லை. எனவே, அந்த பகுதியில் மட்டுமே வீசுவது பலன் தராது. எனவே, நீங்கள் எப்போதும் போல வீசுங்கள். அந்த பகுதியில் மட்டும் வீசாதீர்கள்" என கூறி இருக்கிறார்.

ஹர்பஜன் கூறியது போலவே மூன்றாம் நாள் ஆட்டத்தில், பள்ளங்கள் இல்லாத பகுதியில் வீசி இரண்டு விக்கெட்கள் எடுத்தார் மொயீன் அலி. இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை வீழ்த்த நல்ல வகையில் உதவி இருக்கிறார் ஹர்பஜன்.

ஹர்பஜன் "இதே போல அஸ்வினுக்கு நான்காம் போட்டியில் உதவி இந்தியாவை வெல்ல வைத்து இருக்கலாமே" என்று தான் நமக்கு தோன்றுகிறது. என்னவோ போங்கப்பா....

Story first published: Monday, September 10, 2018, 18:32 [IST]
Other articles published on Sep 10, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+