இலங்கையில் வர்த்தகத்தில் குதிக்கிறார் ஹர்பஜன்.. அமைச்சர் ரவி கருணநாயகேவுடன் ஆலோசனை
கொழும்பு: இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இலங்கையில் தொழில் முதலீடு செய்யவுள்ளாராம். இதை இலங்கை நிதித்துறை அமைச்சர் ரவி கருணநாயகே தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பு வந்த ஹர்பஜன் சிங் கருணநாயகேவை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கையில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவைக் கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிவித்தாராம் ஹர்பஜன் சிங். இலங்கையில் தற்போது வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு முக்கியத்துவம் தருவதாக ஹர்பஜன் சிங்கிடம் எடுத்துக் கூறினாரம் கருணநாயகே.
எந்தத் துறையில் ஹர்பஜன் சிங் முதலீடு செய்யப் போகிறார் என்ற விவரத்தை இரு தரப்புமே வெளியிடவில்லை.
Story first published: Wednesday, December 23, 2015, 17:24 [IST]
Other articles published on Dec 23, 2015


Click it and Unblock the Notifications