For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்பஜன் சிங் சிஎஸ்கே-வை விட்டு எங்கேயும் போகவில்லை... வதந்திகளை மறுக்கும் நிர்வாகம்

Recommended Video

ஹர்பஜன் சிஎஸ்கே-வை விட்டு போகவில்லை...வதந்திகளை மறுக்கும் நிர்வாகம்- வீடியோ

சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சென்ற சீசனில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று ஆடினார். இந்த நிலையில் அவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு ஆலோசகராக செல்ல உள்ளார் என ஒரு வதந்தி பரவியது.

அதை ஹர்பஜன் மறுத்துள்ளார். அவரது மறுப்பை தொடர்ந்து சிஎஸ்கே அணி நிர்வாகமும் அந்த வதந்திகளை மறுத்துள்ளது.

ஐபிஎல் அணிகள் அடுத்த 2019 சீசனுக்கு தயாராகும் வகையில் இப்போதே நிர்வாக ரீதியிலான மாற்றங்கள் மற்றும் பயிற்சியாளர் குழு மாற்றங்களை செய்து வருகின்றன.

ஹர்பஜன் பற்றிய வதந்தி

ஹர்பஜன் பற்றிய வதந்தி

அது பற்றிய செய்திகளில் ஒன்றாக, மும்பை மிரர் என்ற பத்திரிக்கையில் சில நாட்கள் முன்பு ஹர்பஜன் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக செல்ல உள்ளதாகவும், அங்கே தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரிக்கி பாண்டிங் உடன் இணைந்து பணியாற்றுவார் எனவும் தகவல்கள் வெளியிடப்பட்டன.

சிஎஸ்கே-வை விட்டு போகிறாரா ஹர்பஜன்?

சிஎஸ்கே-வை விட்டு போகிறாரா ஹர்பஜன்?

இது பற்றி கேட்ட ஹர்பஜனிடம் போது, தான் 2௦19 ஐபிஎல் சீசனில் சென்னை அணிக்கு விளையாட தயாராக இருப்பதாகவும், எங்கேயும் மாறவில்லை எனவும் கூறினார். இதன் மூலம் ஹர்பஜன் சிஎஸ்கே-வில் ஆட தயாராக இருக்கிறார் என தெரிந்தாலும், சிஎஸ்கே நிர்வாகம் அவரை விடுவிக்குமா அல்லது தக்க வைக்குமா என்ற கேள்வி எழுந்தது.

சிஎஸ்கே உறுதி

சிஎஸ்கே உறுதி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாத் கூறுகையில், "ஹர்பஜன் எங்களை இங்கிலாந்தில் இருந்து அழைத்து பேசினார். தான் எங்கேயும் போகவில்லை. சிஎஸ்கே அணியோடு தான் இருக்கிறேன் என உறுதியாக கூறினார்" என்ற தகவலை கூறி உள்ளார்.

ஹர்பஜன் நீடிப்பாரா?

ஹர்பஜன் நீடிப்பாரா?

ஹர்பஜன் இன்னும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கவில்லை. எனவே, அவர் பயிற்சியாளர், ஆலோசகர் போன்ற பணிகளுக்கு செல்வாரா என்பது சந்தேகம் தான். அதே சமயம், சென்ற ஐபிஎல் தொடரில் தோனி தன் பந்துவீச்சு திட்டங்களில் சில போட்டிகளுக்கு மட்டுமே ஹர்பஜனை பயன்படுத்தினார். அதே போல, சிஎஸ்கே நிர்வாகம் ஹர்பஜனை விடுவிக்க நினைத்தாலும் நினைக்கலாம். ஹர்பஜன் சிஎஸ்கே அணியில் தான் இருக்கிறார் என்பது இப்போதைக்கு உறுதி ஆகி உள்ளது. எனினும், ஏலம் நடக்கும் போது தான் சந்தேகம் தெளிவாகும்.

Story first published: Friday, September 7, 2018, 15:52 [IST]
Other articles published on Sep 7, 2018
English summary
Harbhajan is not going away from CSK, confirms CSK officials. Earlier a rumour spreaded that Bhajji is moving to Delhi Daredevils as mentor.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+