Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

400வது விக்கெட்டை வீழ்த்தி ஹர்பஜன் சிங் சாதனை

Harbhajan Singh
ரோசெயு (டொமினிகா): டெஸ்ட் கிரிக்கெட்டில் 400வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்.

டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரராகவும் அவர் உருவெடுத்துள்ளார்.

ஏற்கனவே அனில் கும்ப்ளே 619 விக்கெட்களையும், கபில் தேவ் 434 விக்கெட்களையும் வீழ்த்தி முதல் இரு இடங்களில் உள்ளனர். இவர்களில் கபில்தேவ்தான் 400 விக்கெட்களைத் தாண்டிய முதல் இந்திய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நியூசிலாந்தின் ஹாட்லியின் உலக சாதனையையும் கபில் தேவ் முறியடித்தவர் என்பது நினைவிருக்கலாம்.

உலக அளவில் முத்தையா முரளீதரன் 800 விக்கெட்கள் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் ஷார்ன் வார்ன் 708 விக்கெட்களுடனும், அனில் கும்ப்ளே மூன்றாவது இடத்திலும் உள்ளனர். தற்போது ஹர்பஜன் சிங் உலக அளவில் 11வது இடத்தில் இருக்கிறார்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் போது இந்த சாதனையைப் படைத்தார் ஹர்பஜன் சிங். கார்ல்டன் பாக்-கை போல்ட் செய்து தனது சாதனையைப் பூர்த்தி செய்தார் ஹர்பஜன் சிங். மேற்கு இந்தியத் தீவுகள் அணி நேற்றைய ஆட்டத்தில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹர்பஜன் சிங் தனது பங்குக்கு 2 விக்கெட்களைச் சாய்த்தார். ஹர்பஜனுக்கு இது 96வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

1998ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட ஆரம்பித்த ஹர்பஜன் சிங் 2001ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை உண்டு இல்லை என்று செய்தவர். அந்த ஆண்டு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபாரமாக பந்து வீசிய ஹர்பஜன் 32 விக்கெட்களை அள்ளினார். அதில்ஒரு ஹாட்ரிக்கும் அடக்கம். டெஸ்ட் போட்டிகளி்ல் இந்திய வீரர் ஒருவர் நிகழ்த்திய முதல் ஹாட்ரிக் சாதனை அது.

96 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஹர்பஜன் இதுவரை 25 முறை 5 விக்கெட்களையும், ஐந்து முறை பத்து விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர்களில் முதல் மூன்று இடங்களில் உள்ளவர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:48 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+