ஆசியாவைத் தாண்டி அசத்துவதில் அஸ்வின் பெஸ்ட்.. ஹர்பஜன் வாவ் பாராட்டு!
Recommended Video

அலிஸ்டர் குக்கை 8வது முறையாக வீழ்த்தி சாதனைபடைத்த அஸ்வின்- வீடியோ
பிர்மிங்காம் : இந்தியா - இங்கிலாந்து இடையே நடந்து வரும் முதல் டெஸ்டில், அஸ்வின் இதுவரை ஐந்து விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். முதல் இன்னிங்க்ஸில் நான்கு விக்கெட்கள் வீழ்த்தி இந்திய பந்துவீச்சில் முக்கிய பங்காற்றினார். இதுவே ஆசியாவுக்கு வெளியே அஸ்வினின் சிறந்த பந்துவீச்சு என புகழ்ந்து இருக்கிறார், ஹர்பஜன் சிங்.
ஒரு காலத்தில் இந்தியாவின் சிறந்த ஸ்பின்னராக வலம் வந்தார் ஹர்பஜன். அதன் பின், அஸ்வின் சில போட்டிகளில் அணியில் சேர்க்கப்பட்டார். அவரின் பந்துவீச்சில் அதிக விக்கெட்கள் கிடைத்தது. அதனால், ஹர்பஜன் புறக்கணிக்கப்பட்டார். தேர்வாளர்களின் முடிவை நேரடியாகக் கூட விமர்சித்து உள்ளார், ஹர்பஜன். அவர் இன்னும் சர்வதேச போட்டிகளில் இருந்து தன் ஓய்வை அறிவிக்கவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இந்தியா - இங்கிலாந்து இடையே நடந்து வரும் போட்டிகளில் தொலைக்காட்சி வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். தனது வர்ணனையின் போது, அஸ்வின் அதிக விக்கெட்கள் கைப்பற்றியதை பற்றி பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசிய ஹர்பஜன், “இந்திய துணைக்கண்டத்துக்கு வெளியே இதுதான் அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சு. கடந்த காலங்களில் அவர் சிறப்பாக செயல்பட்டார் என்றாலும், அவரின் அதிக விக்கெட்கள் துணைக்கண்டத்துக்கு உள்ளேயே கிடைத்தது ஆகும். இந்தியாவில் அதிக விக்கெட்கள் எடுப்பதும் சுலபமில்லை. ஆனால், சொந்த மண் என்பதால் உங்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கும்” என குறிப்பிட்டார்.
மேலும் ஹர்பஜன், அஸ்வின் பல யுக்திகளையும் முயன்று பார்க்காமல், ஒரே சீராக பந்து வீசியதாலேயே அதிக விக்கெட்களை கைப்பற்றியதாக கூறியுள்ளார். இங்கிலாந்தில் பந்து அதிகம் சுழலாது என்பதால், அந்த சுழல் யுக்திகள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது எனவும் கூறினார். அஸ்வின் விக்கெட்கள் கிடைக்காத போது, பல விதமான யுக்திகளை மாற்றி மாற்றி பயன்படுத்துவார். அது தவறு என பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் முன்பு குறிப்பிட்டுள்ளனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், அஸ்வின் 25 ஓவர்கள் வீசினார். அதில் 60 ரன்கள் கொடுத்த அவர், நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார். இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்க்ஸில், துவக்கத்திலேயே அலஸ்டர் குக்கின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
Story first published: Friday, August 3, 2018, 12:52 [IST]
Other articles published on Aug 3, 2018


Click it and Unblock the Notifications