Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எகிறிய அக்தர்... அசத்தல் சிக்ஸ் அடித்த ஹர்பஜன்... வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி

பஞ்சாப் : கடந்த 2010ல் நடைபெற்ற ஆசியா கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அசத்தல் சிக்ஸ் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதிப்படுத்திய ஹர்பஜன் சிங், அதன் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.

Recommended Video

2011 World cup final match re-telecast in Star Sports today

இந்த போட்டியில் கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் களமிறங்கிய ஹர்பஜன் சிங், அசத்தலான சிக்ஸ் அடித்து இந்தியாவிற்கு வெற்றிக்கனியை பறித்துத் தந்தார்.

முன்னதாக மைதானத்தில் சோயிப் அக்தர், ஹர்பஜன் சிங்கை வம்பிழுக்க, அவர்களுக்கு இடையில் புகைச்சல் ஏற்பட்டு, இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் அந்த வீடியோவில் காணப்படுகிறது.

சமூக வலைதளங்களில் பரபர

சமூக வலைதளங்களில் பரபர

இந்தியாவின் சிறந்த லெக் ஸ்பின்னராக இருப்பவர் ஹர்பஜன் சிங். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் இவர், இந்திய அணியின் பேட்டிங்கிலும் சிலபல சிறப்பான தருணங்களை தந்தவர். சமூக வலைதளங்களில் இவர் தொடர்ந்து பரபரப்புடன் செயல்பட்டு வருகிறார்.

ரசிகர்கள் கண்டனம்

ரசிகர்கள் கண்டனம்

சமீபத்தில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடியின் பவுண்டேஷனுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்திருந்தார் ஹர்பஜன் சிங். இதறகு அப்ரிடியும் பதிலுக்கு நன்றி தெரிவித்திருந்தார். ஆனால், இந்த ஆதரவுக்கு இந்திய ரசிகர்கள் கடுமையான கண்டன பதிவுகளை போட்டிருந்தனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான சிக்ஸ்

இந்நிலையில் ரசிகர்களை குஷிப்படுத்தும்வகையில் ஹர்பஜன் சிங் தற்போது புதிய வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த 2010ல் ஆசிய கோப்பை தொடரின் ஒரு போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக அவர் அடித்த சிக்சின் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

இறுதி ஓவரில் அதிரடி

இறுதி ஓவரில் அதிரடி

பாகிஸ்தானுக்கு எதிரான அந்த போட்டியின் இறுதி ஓவரில் இந்தியா வெற்றி பெற 2 பந்துகளுக்கு 3 ரன்கள் தேவைப்பட்டபோது, களமிறங்கிய ஹர்பஜன் சிங், சிக்ஸ் அடித்து இந்தியாவை வெற்றி பெற செய்தார். இதற்கு முன்னதாக பாகிஸ்தானின் முன்னாள் பந்துவீச்சாளர் சோயிப் அக்தருடன் அவருக்கு ஏற்பட்ட சிறு புகைச்சல் வாக்குவாதமாக மாறியதும் ஹர்பஜன் வெளியிட்டுள்ள வீடியோவில் பதிவாகியுள்ளது.

Story first published: Thursday, April 2, 2020, 11:49 [IST]
Other articles published on Apr 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+