உலகத்தை அழிச்சுக்கிட்டு இருக்கோம்.. 7 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை.. பொங்கி எழுந்த ஹர்பஜன் சிங்
உலகத்தை அழிச்சுக்கிட்டு இருக்கோம்.. சிறுமிக்கு நடந்த கொடுமை.. பொங்கி எழுந்த ஹர்பஜன்
Recommended Video
சண்டிகர் : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டார்.
இதை பலரும் கடுமையாக கண்டித்து வருகின்றனர். குற்றவாளிகளை பிடித்து உடனடியாக தண்டிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், அந்த சம்பவம் குறித்து பொங்கி எழுந்துள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். தன் ட்விட்டர் பக்கத்தில் உலகத்தை நாம் தான் அழித்துக் கொண்டு இருக்கிறோம் என கோபமாக கூறி உள்ளார்.

காணாமல் போன சிறுமி
அறந்தாங்கியை சேர்ந்த அந்த 7 வயது சிறுமியை கடந்த ஜூன் மாதம் 31ஆம் தேதி முதல் காணவில்லை. முதலில் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று இருக்கலாம் என்றே கருதிய நிலையில், பின்னர் எங்கும் காணாமல் அவரை காவல்துறை தேடி வந்தது.

பலத்த காயங்கள்
பின்னர் அந்த சிறுமியின் உடல் தம்மம் குளத்திற்கு தண்ணீர் செல்லும் வழியில் உயிரற்ற நிலையில் கிடைத்தது. அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்தன. அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இறந்தது தெரிய வந்தது.

ஒருவர் கைது
இந்த கொடுமையான நிகழ்வு பலரது மனதையும் உலுக்கி உள்ளது. இணையத்தில் பலரும் நீதி கேட்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே அந்த சிறுமியின் கிராமத்தை சேர்ந்த பூ வியாபாரி ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.

ஹர்பஜன் சிங் கோபம்
கைது செய்யப்பட்ட அந்த நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஹர்பஜன் சிங் இந்த சம்பவம் குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் தன் கோபத்தை கொட்டி உள்ளார் அவர். மிகவும் கஷ்டமாக இருப்பதாக கூறி உள்ளார்.

அழிச்சுக்கிட்டு இருக்கோம்
ஹர்பஜன் சிங் பதிவு - "செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க! உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம். நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல. ரொம்ப கஷ்டமா இருக்குயா"


Click it and Unblock the Notifications