For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பந்துவீச்சில் மட்டுமல்ல பேச்சிலும் துஸ்ரா தான்.. தோனி விவகாரத்தில் ஹர்பஜன் சிங் பல்டி..!!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் தனது பந்துவீச்சில் மட்டும் தான் துஸ்ரா வைத்து இருந்தார் என்று நினைத்தோம்

Recommended Video

Dhoni மீது புகார் சொன்ன Harbhajan! Teamல் Select செய்யாதது ஏன்? | OneIndia Tamil

ஆனால், அவர் பேச்சிலும் , துஸ்ரா இருப்பது இப்போது தான் தெரிகிறது. அதாவது பந்துவீச்சில் மாற்றம் கொண்டு வருவது போல் பேச்சிலும் மாற்றம் கொண்டு வந்துள்ளார் ஹர்பஜன் சிங்

கடந்த 2 நாட்களுக்கு முன் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துவிட்டு, பின் அதற்கு எதிர்மறையாக தற்போது பேசி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் ஹர்பஜன்..

தோனி மீது புகார்

தோனி மீது புகார்

கடைசியாக ஹர்பஜன் சிங் 2015ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணிக்காக விளையாடவில்லை. இந்த நிலையில், இந்தியாவுக்காக ஏன் இவ்வளவு நாள் விளையாடவில்லை என்பது குறித்து ஹர்பஜன் சிங் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி பேட்டி ஒன்றை அளித்து இருந்தார்.. அதில், இந்திய அணியில் எனக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்பட்டது என்பது குறித்து அப்போதைய கேப்டன் தோனியிடம் கேட்க முயற்சிப்பேன்.

விளக்கம் தரவில்லை

விளக்கம் தரவில்லை

ஆனால் எனக்கு தோனியிடமிருந்து எந்த விதமான பதிலும் வராது. இதனால் எனக்கு ஏன் இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதில்லை என்பது குறித்து கேட்பதையே நிறுத்திவிட்டேன்.கேட்டாலும் பதில் வராது என்பதால், நான் அந்த கட்டத்திலிருந்து நகர்ந்துவிட்டேன். எனக்கு உரிய விளக்கம் கிடைக்காமல் இருந்தது மன வருத்தத்தை அளித்தது என்று கூறினார்.

ரசிகர்கள் கேள்வி

ரசிகர்கள் கேள்வி

ஹர்பஜனின் இந்த பேச்சு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனை அப்போதே கூறாமல், இப்போது பேச என்ன காரணம், என்று ரசிகர்களும் கேள்வி எழுப்ப தொடங்கினர். தோனி மீது கோபம் இருந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏன் விளையாட வேண்டும், இல்லை தோனி தான் ஏன் ஹர்பஜனை ஏலத்தில் எடுத்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

ஹர்பஜன் சிங் பல்டி

ஹர்பஜன் சிங் பல்டி

இந்த நிலையில், தற்போது ஹர்பஜன் சிங் அளித்துள்ள பேட்டியில், வீரர்களுக்கு ஆதரவு தந்து ஊக்கம் அளிப்பதில் தோனி தான் சிறந்தவர். அந்த விதத்தில் தோனி சிறந்த கேப்டனாக விளங்கியதாகவும் ஹர்பஜன் சிங் கூறினார். என்ன ஹர்பஜன் இப்படி பல்டி அடித்துவிட்டாரே என்று ரசிகர்களும் ஆச்சரியத்துடன் ஹர்பஜன் பேச்சை கடந்து சென்றனர்.

Story first published: Sunday, January 2, 2022, 11:56 [IST]
Other articles published on Jan 2, 2022
English summary
Harbhajan singh back tracked his comment on MS Dhoni தோனி விவகாரத்தில் பல்டி அடித்த ஹர்பஜன் சிங்,,!! டிச.31- புகார், ஜனவரி 1 புகழாரம்..
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+