Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விரைவில் அப்பாவாகப் போகும் ஹர்பஜன் சிங்

மும்பை: கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் மனைவி கீதா பஸ்ரா கர்ப்பமாக உள்ளார்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பாலிவுட் நடிகை கீதா பஸ்ராவை 5 ஆண்டுகளாக காதலித்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி பஜ்ஜி, கீதாவின் திருமணம் பஞ்சாப் மாநிலத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இதையடுத்து நடந்த திருமண வரவேற்பில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபில் 9வது சீசன் துவக்க விழாவுக்கு பஜ்ஜியுடன் அவரது மனைவி கீதாவும் வந்திருந்தார். லூஸான கவுன் அணிந்திருந்த அவர் காலில் சம்பந்தமே இல்லாமல் ஷூ அணிந்து வந்திருந்தது அனைவரையும் வியக்க வைத்தது.

ஒரு வேளை?

ஒரு வேளை?

அழகாக ஆடை அணிந்து, ஹை ஹீல்ஸ் அணியும் கீதா ஐபிஎல் துவக்க விழாவுக்கு வந்திருந்த விதத்தை பார்த்தவர்களுக்கு லேசாக சந்தேகம் எழுந்தது. மேலும் அவர் தனது கைப்பையை வைத்து வயிறை மறைத்துக் கொண்டே இருந்தார். அவரது வயிறு லேசாக பெரிதாக இருந்தது.

கர்ப்பமே

கர்ப்பமே

கீதா கர்ப்பமாக இருப்பது உறுதியாகியுள்ளது. அதனால் தான் அவர் லூஸான கவுன் அணிந்து ஐபிஎல் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். கீதா திருமணத்திற்கு பிறகு சினிமா படங்களில் நடிக்காமல் வீட்டை கவனித்துக் கொண்டிருக்கிறார்.

தாய் வீடு

தாய் வீடு

கீதா இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர். சினிமா படங்களில் நடிப்பதற்காக அவர் இந்தியா வந்து மும்பையில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவர் தனது தலை பிரசவத்திற்காக லண்டனில் உள்ள தனது தாய் வீட்டிற்கு விரைவில் செல்ல உள்ளார்.

Story first published: Tuesday, April 12, 2016, 11:09 [IST]
Other articles published on Apr 12, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+