ஹர்பஜன் சிங் அப்பாவானார்.. மனைவி கீதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது!
டெல்லி: இந்தியாவின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங்கின் மனைவி கீதா பஸ்ராவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள மருத்துவமனையில் கீதாவுக்கு பிரசவமாகியுள்ளது. இந்த செய்தியை ஹர்பஜன் சிங்கின் தாயார் உறுதிப்படுத்தியுள்ளார். தனது மருமகளும், பேத்தியும் நன்றாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும் இந்த தகவலை இதுவரை ஹர்பஜன் சிங்கோ அல்லது கீதாவோ தங்களது டிவிட்டர் அல்லது பேஸ்புக் பக்கத்தில் தகவல் எதையும் தெரிவிக்கவில்லை.
தற்போது ஹர்பஜன் சிங் தனது மனைவியின் அருகே இருப்பதாக இந்தி நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது. இவர்களது திருமணம் கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி ஜலந்தரில் நடந்தது என்பது நினைவிருக்கலாம். கடந்த ஜூன் மாதம்தான் கீதாவுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.
Story first published: Thursday, July 28, 2016, 14:00 [IST]
Other articles published on Jul 28, 2016


Click it and Unblock the Notifications