Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி மீது வன்மத்தை கக்கும் ஹர்பஜன்.. நாங்க என்ன லெஸியா குடிச்சோம்.. எல்லாத்தையும் தோனியே சொல்றீங்க?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து ஹர்பஜன் சிங் கூறிய விமர்சனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Harbhajan Is Furious With Dhoni For Getting Credit Of 2011 World Cup Win | Oneindia Tamil

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஹர்பஜன், அணியை விட்டு சென்றதும் தோனி மீது என்ன கோபம் என்று தெரியவில்லை. கம்பீருக்கு டப்பிங் கொடுப்பது போல் பேசி வருகிறார்.

குறிப்பாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த பிறகு ஹர்பஜன் சிங் கொடுத்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது.

தோனி மீது புகார்

தோனி மீது புகார்

தாம் இந்திய அணியில் எடுக்கப்படாதது குறித்து தோனியிடம் காரணம் கேட்டேன் என்றும், ஆனால் அதற்கு அவர் உரிய பதில் அளிக்கவில்லை என்றும் ஹர்பஜன் சிங் கூறியிருந்தார். இதனால் பதில் வராதவர்களிடம் கேள்வி கேட்பது தவறு என்று, தாம் அது குறித்து தோனியிடம் பேசுவதையே நிறுத்திவிட்டேன் என்று ஹர்பஜன் சிங் பேசி இருந்தார்.

ஹர்பஜன் எதிர்ப்பு

ஹர்பஜன் எதிர்ப்பு

இந்த நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற உரையாடல் நிகழ்ச்சியில் பேசிய முகமது கையிப், டெல்லி அணி ஐபிஎல் 2020 இறுதிப் போட்டிக்கு வந்ததற்கும், கொல்கத்தா அணி தற்போது சிறப்பாக விளையாடுவதற்கும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை பாராட்டி பேசினார். முகமது கையிப்பின் இந்த பேச்சுக்கு ஹர்பஜன் சிங் எதிர்ப்பு தெரிவித்தார்.

தோனி மட்டுமா காரணம்?

தோனி மட்டுமா காரணம்?

அது என்ன எல்லாவற்றிக்கும் கேப்டனையே சொல்றீங்க. பிறகு என்ன மற்ற வீரர்கள் எல்லாம் கிட்டி புல் ஆடினார்களா. இப்படி தான் 2011 உலககோப்பை போட்டியிலும் நடந்தது. மற்ற நாடுகள் உலககோப்பை வென்றால் அந்த நாட்டின் பெயரை சொல்லி உலககோப்பை வென்றது என்று செய்தி போடுவார்கள். ஆனால் இந்தியாவில் மட்டும் தான் 2011ஆம் ஆண்ட உலககோப்பை வென்ற பிறகு, தோனி உலககோப்பையை வென்றார் என்று செய்தி போட்டார்கள்.

லெஸியா குடித்தோம்

லெஸியா குடித்தோம்

பிறகு நாங்கள் எல்லாம் என்ன செய்தோம். வெறும் லெஸி மட்டுமா குடித்து கொண்டு இருந்தோம். கம்பீர் என்ன செய்து கொண்டு இருந்தார். கிரிக்கெட் என்பது ஒரு அணியாக விளையாடுவது.7,8 பேர் சரியாக விளையாடினால் மட்டுமே அந்த அணி வெற்றி பெறும். கேப்டன் மட்டும் காரணம் அல்ல என்று ஹர்பஜன் சிங் பேசினார்.

Story first published: Thursday, April 14, 2022, 23:07 [IST]
Other articles published on Apr 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+