Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கண்ணத்தில் அறைந்தது முதல் மங்கி கேட் வரை,, ஹர்பஜன் சிங் கடந்து வந்த பாதை..

சென்னை: ஒரு பிரபல நட்சத்திரம் என்ன செய்வாரோ, அது எல்லாம் செய்தவர் தான் ஹர்பஜன் சிங், நாட்டுக்காக வெற்றியையும் பெற்று தந்தார், அதே சமயம், பல சர்ச்சைகளிலும் சிக்கினார்.

பார்ப்பதற்கு அமைதி கடல் போல் இருக்கும் ஹர்பஜன் சிங், உண்மையில் ஒரு காட்டாறு.. அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் செய்த அலப்பறை கொஞ்சம் நஞ்சம் அல்ல..

நீங்கள் என் முன் எப்படி நடந்து கொள்கிறீர்களோ, அதையே நான் திருப்பி செய்வேன் என்ற கோட்பாடு படி நடக்கும் ஹர்பஜன்,தான் பங்கேற்ற முதல் தொடரிலேயே சர்ச்சையில் சிக்கினார்

முதல் தொடரில் தண்டனை

முதல் தொடரில் தண்டனை

ஹர்பஜன் சிங் தாம் விளையாடிய முதல் சர்வதேச ஒருநாள் தொடரில் ரிக்கி பாண்டிங்குடன் மோதினார். இருவருக்கும் இடையவே ஒத்து வரவே இல்லை. ரிக்கி பாண்டிங்கை அவுட்டாக்கிய பிறகு, ஹர்பஜன் சிங் ஆட்டம் போட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்த, அவரது அறிமுக தொடரிலேயே அவருக்கு ஒரு போட்டியில் பங்கேற்க ஐ.சி.சி. தடை விதித்தது

 சைமண்ட்ஸ் உடன் மோதல்

சைமண்ட்ஸ் உடன் மோதல்

2007-08 ஆம் சீசனில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி, அந்த காலத்தின் ஹாட் டாப்பிக். பிரதமரின் செய்திகளையே பின்னுக்கு தள்ளிய கிரிக்கெட் விவகாரம் என்றால் அது தான். சிட்னி டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங் அரைசதம் கடந்து விளையாடிய நிலையில், அவரை ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ் வம்பிழுக்க, பதிலுக்கு அவரை ஹர்பஜன் தகாத வார்த்தையால் திட்டினார்.

ஹர்பஜனுக்கு தடை

ஹர்பஜனுக்கு தடை

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஹர்பஜன் சிங் தன்னை நிறவெறியுடன் குரங்கு என்று திட்டியதாக நடுவரிடம் சைமண்ட்ஸ் புகார் அளிக்க, ஹர்பஜன் சிங்கிற்கு 3 டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. பின்னர் ஹர்பஜன் சிங் மீது நடத்தப்பட்ட விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இதனால் அவருக்கான தண்டனை குறைக்கப்பட்டது.

ஸ்ரீசாந்துக்கு பளார்

ஸ்ரீசாந்துக்கு பளார்

சரி, எதிரணியை சேர்ந்தவர்களை தான் திட்டினார் என்று பார்த்தால் சக அணி வீரரை கண்ணத்திலேயே பளார் என்று ஒரு அறை விட்டார்.2008ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ஹர்பஜனை பார்த்து பஞ்சாப் அணியின் ஸ்ரீசாந்த் கிண்டல் செய்தார். இதனால் பளார் என்று ஒரு அறை விட, சர்ச்சை வெடித்தது.

Recommended Video

அடுத்து பயிற்சியாளர் பொறுப்பு? விரைவிலேயே Retirement-ஐ அறிவிக்க போகும் Harbhajan Singh?
பந்துவீச்சில் சர்ச்சை

பந்துவீச்சில் சர்ச்சை

அந்த தொடர் முழுவதும் ஹர்பஜனுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் மூன்று ஒருநாள் போட்டியில் பங்கேற்கவும் ஹர்பஜனுக்கு தடை விதிக்கப்பட்டது.ஹர்பஜன் துஸ்ரா என்ற பந்துவீச்சை வீசுவதில் வல்லவர். ஆனால், அவரது பந்துவீச்சு விதிகளுக்கு மீறியதாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. எனினும், ஆய்வில், அவர் பந்துவீச்சு ஸ்டைலில் எந்த தவறும் இல்லை என தெரியவந்தது.

Story first published: Friday, December 24, 2021, 18:54 [IST]
Other articles published on Dec 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+