Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்பஜன் சிங்குக்கு "ஆண்" குழந்தை.. தம்பதிகள் கண்ணீர் - குடும்பத்துக்குனு வாரிசு வந்தாச்சு

மும்பை: நம்ம 'பாஜி' ஹர்பஜன் சிங்குக்கு ஆண் குழந்தை பிறந்திரப்பதால், குடும்பமே குதூகலத்தில் உள்ளது.

ஹர்பஜன் சிங்.. இந்திய அணியின் முன்னாள் ஸ்பின் பவுலர். எப்பேற்பட்டா களமாக இருந்தாலும் போட்டுப் பார்த்துவிடும் சவாலான குணமுடையவர்.

சர்வதேச கிரிக்கெட்டில் அஷ்வின் வருகைக்கு பிறகு, ஹர்பஜனின் ஆதிக்கம் மெல்ல மெல்ல குறைந்தது. இருப்பினும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்தார்.

அழகான ஆண் குழந்தை

அழகான ஆண் குழந்தை

ஹர்பஜனுக்கும் நடிகை கீதா பஸ்ராவுக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 4 வயதில் ஹினாயா எனும் மகளும் உள்ளார். இந்நிலையில், கீதா மீண்டும் கர்ப்பம் தரிக்க, தற்போது இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

குவியும் வாழ்த்து

குவியும் வாழ்த்து

இதையடுத்து, ஹர்பஜன் தனது ட்விட்டரில், தாயும் சேயும் நலம் என ட்வீட் செய்ய, கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த ரசிகர்கள் பட்டாளத்தில், சென்னை ரசிகர்களின் வாழ்த்துக்கள் தான் மிக அதிகம்.

சிங் ஈஸ் கிங்

சிங் ஈஸ் கிங்

ஏனெனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய வரை, ஹர்பஜன் தமிழில் தான் ட்வீட் செய்து வந்தார். இதற்காகவே தனது தமிழ் ரசிகர் ஒருவரை நியமனம் செய்து, அவரை தமிழில் ட்வீட் செய்து ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுப்பது சிங்கின் வழக்கம். அவரது இந்த செயல்பாட்டுக்கே அவரை ஏகப்பட்ட தமிழ ரசிகர்கள் நேசிக்கத் தொடங்கினர்.

வெப் சீரிஸ்

வெப் சீரிஸ்

அப்படிப்பட்ட ஒருவருக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்றால், சும்மா இருப்பர்களா? ஹர்பஜன் ட்வீட் முழுவதும் தமிழ் ரசிகர்களின் வாழ்த்து மழை தான். அதுமட்டுமல்ல, தமிழில் அவர் இரண்டு படங்களில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தவிர, திருவள்ளுவரை மையப்படுத்திய ஒரு வெப் சீரிஸ் ஹர்பஜன் நடித்ததும் மறக்க முடியாதது.

Story first published: Saturday, July 10, 2021, 19:57 [IST]
Other articles published on Jul 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+