Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“டிராவிட்டை நீக்கனும், இல்லைனா அத செய்யனும்”.. இந்திய அணியின் டி20 எதிர்காலம் என்ன?ஹர்பஜன் அறிவுரை!

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா தோற்ற நிலையில் அணிக்கு புதிய நிர்வாகிகள் மற்றும் கேப்டன் தேவை என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கல் வித்தியாசத்தில் படு மோசமாக தோற்றது. லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்ட போதும் நாக் அவுட்டில் அதிர்ச்சி கொடுத்தது.

இதனையடுத்து இந்திய அணியில் கேப்டன் மற்றும் நிர்வாகிகளை மாற்ற வேண்டுமா என்ற விவாதங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

இந்திய அணி தோல்வி

இந்திய அணி தோல்வி

கடந்தாண்டு டி20 உலகக்கோப்பையில் இந்தியா லீக் சுற்றிலேயே வெளியேறியதை அடுத்து ராகுல் டிராவிட் புதிய பயிற்சியாளராக பதவியேற்றுக்கொண்டார். டிராவிட் - ரோகித் சர்மா ஜோடி இந்திய அணிக்காக பல்வேறு தொடர்களை வென்றுக்கொடுத்தனர். இந்த முறை உலக்கோப்பை கனவையும் நிஜமாக்குவார்கள் என நினைத்த போது தான் ஏமாற்றம் கிடைத்துள்ளது.

ஹர்பஜன் கருத்து

ஹர்பஜன் கருத்து

இந்நிலையில் பயிற்சியாளரை மாற்ற வேண்டும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணியில் கேப்டன் மட்டுமின்றி பயிற்சியாளரையும் மாற்றியே தீர வேண்டும். டி20 கிரிக்கெட்டை நன்கு புரிந்துக்கொண்டு, சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒரு நபரை அணிக்கு பயிற்சியாளராக நியமிக்க வேண்டும். ஒருவேளை டிராவிட்டை நீக்க மனம் வரவில்லை என்றால் ஆலோசகராகவாவது நியமித்திட வேண்டும்.

புத்துணர்ச்சி தரும்

புத்துணர்ச்சி தரும்

டிராவிட் மிகவும் திறமையானவர் தான். ஆனால் ஆஷிஸ் நெஹ்ரா போன்று சமீபத்தில் ஓய்வு பெற்ற நபர் டிராவிட்டிற்கு உதவியாக இருந்தால் சிறப்பாக இருக்கும். நெஹ்ரா மிகவும் திறமையானவர். தனது முதல் சீசனிலேயே குஜராத் அணியை கோப்பையை வெல்ல வைத்தார். அப்படிபட்டவரை மிஸ் செய்துவிடக்கூடாது.

புதிய கேப்டன்

புதிய கேப்டன்

இதே போல இந்திய அணியின் கேப்டனாகவும் ரோகித் சர்மா நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்ட்யா பதவியேற்க வேண்டும். பாண்ட்யா மற்றும் நெஹ்ராவை உள்ளே கொண்டு வந்தால் இளம் வீரர்களுக்கு ஒரு கூடுதல் புத்துணர்ச்சி கிடைக்கும். எனவே இதுகுறித்து பிசிசிஐ பரிசீலிக்க வேண்டியது அவசியமாகும்.

Story first published: Friday, November 11, 2022, 17:10 [IST]
Other articles published on Nov 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+